உக்காரை (Ukkaarai Recipe in Tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப் கடலைப்பருப்பு
  2. 1_1/2 கப் துருவிய தேங்காய்
  3. 2கப் வெல்லம்
  4. 1/2கப்நெய்
  5. 2ஸ்பூன் ஏலத்தூள்
  6. 1/4ஸ்பூன் சுக்குத் தூள்
  7. 1/4ஸ்பூன் ஜாதிக்காய் பொடி

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் வரை ஊறவிட்டு களைந்து கிள்ளு பதத்தில் வேகவிட்டு வடிகட்டி மின்விசிறியின் அடியில் பரப்பி ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்

  2. 2

    வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு அரைகம்பி பதம் வந்ததும் பொடித்து வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கிளறவும்

  3. 3

    வெல்லத்துடன் சேர்ந்து வந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி ஏலத்தூள் சுக்குத் தூள் ஜாதிக்காய் பொடி சேர்த்து சூடான நெய் சேர்த்து நன்கு கிளறவும்

  4. 4

    எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கவும் சுவையான ஆரோக்கியமான உக்காரை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes