செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை (Chettinadu special ukkaarai recipe in tamil)

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175

#arusuvai1
#goldenapron3
செட்டிநாடு உணவுகள் பெரும்பாலும் சுவையாகவே இருக்கும். அதிலும் இனிப்பு பலகாரங்கள் நிறைய உள்ளன. பாசிப்பருப்பு வைத்து செட்டிநாடு ஸ்டைல் ஸ்பெஷல் உக்கரை. அதிக நெய் சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரும். முந்திரி அதிகம் சேர்ப்பதால் சுவையாகவும் இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவர் ஸ்னாக்ஸ் சாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோ பாசிப்பருப்பு
  2. 25 கிராம் முந்திரி
  3. 1 மூடி தேங்காய்
  4. 1/4 கிலோ சர்க்கரை
  5. 100 கிராம் நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை 4 மணி நேரம் நன்கு ஊற வைக்கவும். பின் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    இட்லி போல் அந்த பாசிப்பயிறு மாவை ஊற்றி ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும்.பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை பிரிட்ஜில் ஒரு இரவு முழுவதும் வைக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால்தான் மாவு நன்றாக விழுது போல் வரும் மறுநாள்.

  3. 3

    பின் அதை மிக்ஸியில் அரைத்து நன்கு உதிரி ஆக்கிக் கொள்ளவும். ஒரு மூடி தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    வானலியில் தேங்காயை நன்கு வதக்கிக் கொள்ளவும். பின் அதில் நெய் ஊற்றி முந்திரி சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    முந்திரியை சிறு சிறு துண்டுகளாக நெய்யில் சேர்த்து வதக்கவும். அதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  6. 6

    பின் வாணலியில் நெய் ஊற்றி நன்கு காய வைக்கவும். பின் அதில் அரைத்து வைத்த பாசிப்பருப்பு மாவை பொன்னிறமாக நன்கு கிளறவும். பின் நெய் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhivya Malai
Dhivya Malai @cook_19740175
அன்று

Similar Recipes