கடல்பாசி அல்வா (Kadalpaasi halwa recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

# Arusuvai 1 கடல்பாசி நம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். கடல் பாசி அல்வாவின் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.

கடல்பாசி அல்வா (Kadalpaasi halwa recipe in tamil)

# Arusuvai 1 கடல்பாசி நம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். கடல் பாசி அல்வாவின் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 பீஸ் வரும்
  1. 10 கிராம் கடல்பாசி
  2. 1/2 டம்ளர் சர்க்கரை
  3. 3/4 டம்ளர் பால்
  4. 1 டம்ளர் தண்ணீர்
  5. 3 பாதாம்
  6. 3 முந்திரி
  7. 2 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடற்பாசியை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். மூன்று பாதாம், மூன்று முந்திரி, இரண்டு ஏலக்காயை பொடி செய்து வைக்கவும். அரை டம்ளர் சர்க்கரையை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஊறிய கடல்பாசி மூன்றாவது படத்தில் இருப்பது போல் இருக்கும்.

  2. 2

    ஊறிய கடல் பாசியை அடுப்பில் வைத்து நன்கு கரையும் வரை கொதிக்கவிடவும். இப்பொழுது சர்க்கரை சேர்க்கவும்.3/4 டம்ளர் பால் எடுத்து வைக்கவும்.

  3. 3

    சர்க்கரை கரைந்தவுடன் பால் சேர்க்கவும். இப்பொழுது பாதாம்,முந்திரி,ஏலக்காய் பொடியை சேர்க்கவும். ஒரு தட்டில் இரண்டு ஸ்பூன் நெய் தடவி வைக்கவும்.

  4. 4

    இதில் கடல்பாசியை ஊற்றவும். நன்கு ஆறியவுடன் பீஸ் போட வேண்டும். சுவையான கடல்பாசி அல்வா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Top Search in

Similar Recipes