ஹோம்மேட் டேட்ஸ் சிரப் (Home made dates syrub recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#arusuvai1
பேரீச்சம்பழத்தை பயன்படுத்தி வீட்டிலேயே சிரப் செய்து வைத்துக் கொண்டால் பாலில் கலந்தோ அல்லது பிரட் டோஸ்ட், பேன் கேக் இவைகளுக்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். பழச்சாறுகளில் சர்க்கரைக்கு பதிலாக ஸ்வீட்னராக கலந்தும் அருந்தலாம். இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

ஹோம்மேட் டேட்ஸ் சிரப் (Home made dates syrub recipe in tamil)

#arusuvai1
பேரீச்சம்பழத்தை பயன்படுத்தி வீட்டிலேயே சிரப் செய்து வைத்துக் கொண்டால் பாலில் கலந்தோ அல்லது பிரட் டோஸ்ட், பேன் கேக் இவைகளுக்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். பழச்சாறுகளில் சர்க்கரைக்கு பதிலாக ஸ்வீட்னராக கலந்தும் அருந்தலாம். இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30முதல்40 நிமிடங்கள்
200 ml
  1. 1கப்விதை நீக்கிய பேரீச்சம்பழம்
  2. 1கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30முதல்40 நிமிடங்கள்
  1. 1

    பேரிச்சம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும். அதில் ஒரு கப் சுடு தண்ணீர் சேர்த்து ஒரு தட்டு கொண்டு மூடி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

  2. 2

    பத்து நிமிடங்களுக்குப் பிறகு அதனை அடுப்பில் வைத்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு அதனை சிறிது ஆற விடவும்.

  3. 3

    வெதுவெதுப்பாக இருக்கும்போது கரண்டியையோ அல்லது கையால் நன்கு மசித்து விடவும்

  4. 4

    பிறகு வேறொரு பவுலில் அதன் மேல் ஒரு வடிதட்டு வைத்து அதன்மேல் சிறிய வெள்ளை காட்டன் துணியை விரித்து பேரிச்சம்கூழை ஊற்றி வடிகட்டவும். துணியை பிடித்து நன்கு பிழிந்து விடவும்.

  5. 5

    எல்லாம் வடிந்த பிறகு அதனை மீண்டும் அடுப்பில் மிதமான தீயில் வைத்து 10 அல்லது 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

  6. 6

    சிறிது வற்றியதும் அதாவது தேன் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விட்டு காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து ஒரு வாரம் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம். ஹோம்மேட் டேட்ஸ் சிரப். நேச்சுரல்ஸ் ஸ்வீட்னர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes