கார கச்சாயம் (Kaara kachayam recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#arusuvai2
இந்த கச்சாயத்தை இட்லிக்கு உளுந்து ஆட்டும் பொழுது ஒரு கைப்பிடி அளவு மாவு எடுத்து வைத்து காரதோசை மாவில் சேர்த்து செய்வோம். இதை நீங்கள் தனியாக செய்யும் அளவிற்கு அளவு கொடுத்துள்ளேன்.

கார கச்சாயம் (Kaara kachayam recipe in tamil)

#arusuvai2
இந்த கச்சாயத்தை இட்லிக்கு உளுந்து ஆட்டும் பொழுது ஒரு கைப்பிடி அளவு மாவு எடுத்து வைத்து காரதோசை மாவில் சேர்த்து செய்வோம். இதை நீங்கள் தனியாக செய்யும் அளவிற்கு அளவு கொடுத்துள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பேர்
  1. 2தம்ளர் இட்லி அரிசி
  2. 1கைப்பிடி துவரம் பருப்பு
  3. 1பெரிய கப் அளவிற்கு அரைத்த உளுந்து மாவு(ஈரமாவு)
  4. 1தம்ளர் சின்ன வெங்காயம்
  5. 10வர மிளகாய்
  6. 1கைப்பிடி கருவேப்பிலை
  7. 1கைப்பிடி கொத்தமல்லி தழை
  8. தேவையான அளவுஉப்பு
  9. கச்சாயம் சுட்டு எடுக்க தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் இரண்டு டம்ளர் இட்லி அரிசி ஒரு கைப்பிடி துவரம்பருப்பு இரண்டையும் கழுவிவிட்டு பத்து வரமிளகாய் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும். ஊறவைத்த அரிசி, மிளகாய், துவரம் பருப்பு மூன்றையும் கிரைண்டரில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    சின்ன வெங்காயம் ஒரு டம்ளர் அளவிற்கு எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.கறிவேப்பிலை ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி எடுத்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். முதலில் வெங்காயத்தை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். அதுபோல் கருவேப்பிலை கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும் அல்லது பொடியாக அரிந்து கொள்ளவும்.

  3. 3

    மாவில் மேற்கூறியவற்றை சேர்த்துக் கொள்ளவும். நைசாக அரைத்த உளுந்து மாவு ஒரு பெரிய கப் அளவிற்கு எடுத்துக் கொண்டு அரைத்த அரிசி மாவில் சேர்த்துக் கொள்ளவும்.(இட்லிக்கு உளுந்து அரைக்கும் பொழுது அதில் ஒரு கைப்பிடி அளவு உளுந்து சேர்த்து ஊற வைத்து அந்த அளவு மாவை எடுத்து வைத்துக் கொள்ளலாம்). அல்லது 50 கிராம் அளவிற்கு உளுந்து ஊற வைத்து தனியாகவும் ஆட்டி சேர்த்துக்கொள்ளலாம்.அரைத்த கச்சாயம் மாவில் உளுந்து மாவு சேர்த்து கலக்கும்போது உளுந்து போதும் போதாது என்று தெரியும். நீர்க்க கரைக்க வேண்டாம்.

  4. 4

    எல்லாவற்றையும் கரண்டி கொண்டு நன்கு கலந்து கொள்ளவும். கரண்டியில் மொண்டு ஊற்றும் பதத்திற்கு மாவை தயார் செய்து கொள்ளவும். சிறிய குழிக்கரண்டி எடுத்துக் கொள்ளவும்.

  5. 5

    இப்போது கச்சாயம் சுட தேவையான அளவிற்கு ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் சேர்த்து காயவைக்கவும். எண்ணெய் காய்ந்தவுடன் கரண்டியில் கச்சாயம் மாவை எடுத்து எண்ணெயில் சேர்க்கவும். ஒரு கச்சாயம் ஊற்றிய உடன் ஒரு சில நொடிகளில் மேலெழும்பும். அடுத்த கச்சாயத்தை கரண்டியில் மீண்டும் எடுத்து எண்ணையில் ஊற்றவும். இவ்வாறாக எண்ணெய் கொள்ளும் அளவிற்கு கச்சாய மாவை ஊற்றவும். பணியார கம்பி கொண்டு திருப்பி விடவும். ஒட்டிக் கொண்டாலும் மாவு வேக வேக தனியாக பிரிந்து கொள்ளும்..

  6. 6

    நன்கு திருப்பி விட்டு எல்லா புறமும் சிவக்க விடவும். ஒரு அரிகரண்டி கொண்டு எண்ணெயை வடித்து கச்சாயத்தை சுட்டு எடுக்கவும். இப்போது சூடான கார கச்சாயம் தயார். மீதி மாவு இருந்தால் கார தோசை ஊற்றிக் கொள்ளலாம். மாலை நேர ஸ்னாக்ஸ் ஆக செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes