ரெஸ்டாரன்ட் தோசை

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#everyday1 பொதுவாகவே ஹோட்டல் தோசைக்கு தனி ருசி. நான் எப்பொழுதும் தோசைக்கு மாவு தனியாகத்தான் அரைப்பேன். நீங்களும் என் செய்முறையை முயன்று பாருங்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 4கப் இட்லி அரிசி
  2. 1கப் பச்சரிசி
  3. 2டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு
  4. 1கப் வெள்ளை முழு உளுந்து
  5. 2ஸ்பூன் வெந்தயம்
  6. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பச்சை அரிசி இட்லி அரிசி கடலைப் பருப்பு இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு கழுவி 2 மணி நேரங்கள் ஊற வைக்கவும்

  2. 2

    உளுந்தையும், வெந்தயத்தையும் தனித்தனியே கழுவி அதனையும் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரங்கள் ஊற வைக்கவும்

  3. 3

    பிறகு கிரைண்டரில் முதலில் வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து ஊற்றி சிறிது ஓடவிட்டு அதன்பிறகு உளுந்தையும் சேர்த்து நன்கு பொங்க பொங்க அரைத்து எடுக்கவும். அதற்கடுத்து அரிசி, கடலைப் பருப்பை சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்

  4. 4

    பிறகு உளுந்துடன், அரிசி மாவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கையால் கரைக்கவும் அதாவது தேவை என்றால் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும். இதனை 8 மணி மணி நேரம் புளிக்க வைக்கவும்

  5. 5

    8 மணி நேரம் கழித்த பிறகு மாவு நன்கு பொங்கி வந்திருக்கும். இப்போது அடுப்பில் தோசை தவாவை வைத்து மாவை தோசைகளாக வார்க்கவும்

  6. 6

    சுற்றிலும் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு நன்கு முறுகலாக சுட்டு எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes