காரசாரமான நெல்லிக்காய் ஊறுகாய் (Nellikaai ooruukaai recipe in tamil)

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 நாட்கள்
  1. 1/2 கிலோ பெரிய நெல்லிக்காய்
  2. 1/2 கப் நல்லெண்ணெய்
  3. 3 டீஸ்பூன் உப்பு
  4. 3 டீஸ்பூன் மிளகாய் பொடி
  5. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன் கடுகு
  7. 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  8. 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

3 நாட்கள்
  1. 1

    நெல்லிக்காயை கழுவி நன்கு துடைத்து நறுக்கிக் கொள்ளவும். சிறிதும் தண்ணீர் இருக்கக் கூடாது.

  2. 2

    பின் நறுக்கியதை ஒரு தாம்பாளத்தில் போட்டு நிழ வெயிலில் ஒரு நாள் முழுவதும் காய வைத்து எடுக்கவும்

  3. 3

    வெறும் வாணலியில் தலா அரை டீஸ்பூன் கடுகு, வெந்தயம் சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்

  4. 4

    நெல்லிக்காய் நன்கு காய்ந்ததும் அதை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் பொடி, உப்பு,நல்லெண்ணெய், வறுத்த கடுகு வெந்தயப் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.

  5. 5

    நெல்லிக்காய் நல்லெண்ணெயில் மூழ்கி இருக்க வேண்டும்

  6. 6

    கடாயில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து சேர்க்கவும். எலுமிச்சை ஜூஸை கலந்து கொள்ளவும்

  7. 7

    மேலும் இரண்டு நாள் எண்ணெயில் நன்கு ஊறியதும் பாட்டிலில் அடைத்து வைக்கலாம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
அன்று

Similar Recipes