நெல்லிக்காய் சாதம் செய்வது எப்படி (Nellikaai saatham recipe in tamil)

Rekha Shenthil Kumar
Rekha Shenthil Kumar @cook_24028185

நெல்லிக்காய் சாதம் செய்வது எப்படி (Nellikaai saatham recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. -5 (சிறியது)நெல்லிக்காய்
  2. 1 கப்அரிசி
  3. 1பச்சை மிளகாய்
  4. 1/2 ஸ்பூன்கடுகு
  5. 1/2ஸ்பூன்உளுந்தம்பருப்பு
  6. 1ஸ்பூன்கடலைப்பருப்பு
  7. 2ஸ்பூன்நிலக்கடலை
  8. கருவேப்பிலை
  9. 2ஸ்பூன்நல்லெண்ணெய்
  10. உப்பு-தேவையான அளவு
  11. 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    அரிசியை நன்கு கழுவி 2.5 கப் தண்ணீர் சேர்த்து உதிரி உதிரியாக வடித்துக் கொள்ளவும்

  2. 2

    நெல்லிக்காயை துருவிக் கொள்ளவும் (பெரிய (நெல்லிக்காயாக இருந்தால் 3 சிறியதாக இருந்தால் 5எடுத்துக் கொள்ளவும்)

  3. 3

    வெறும் வாணலியில் நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி கொள்ளவும்

  4. 4

    சூடான வாணலியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் 1/2 ஸ்பூன் கடுகு,1/2 ஸ்பூன் உளுந்தம்பருப்பு, 1 ஸ்பூன் கடலைப்பருப்பு,1/2 ஸ்பூன் மஞ்சள், 2 ஸ்பூன் தோல் நீக்கிய வறுத்த வேர்க்கடலை,ஆகியவற்றை வறுத்து அதனுடன் 1 பச்சை மிளகாயை நறுக்கி சேர்க்கவும்

  5. 5

    தாளிசத்துடன் துருவிய நெல்லிக்காய்,கருவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்,இந்த கலவையில் வடித்த சாதத்தை கொட்டி நன்கு கிளறவும்

  6. 6

    சுவையான நெல்லிக்காய் சாதம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rekha Shenthil Kumar
Rekha Shenthil Kumar @cook_24028185
அன்று

Similar Recipes