மாதுளை தயிர் சாதம்🍑 (Maathulai thayir saatham recipe in tamil)

மாதுளை தயிர் சாதம்🍑 (Maathulai thayir saatham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1/2மாதுளம்பழத்தை உதிர்த்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு கப் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் தயிர் தேவைப்படும். சாதம் முன்கூட்டியே செய்வதாக இருந்தால் அரை ஸ்பூன் தயிர் கூட போதுமானது. சாப்பிடும் பொழுது தயிர் சாதம் தயார் செய்வது என்றால் புளிக்காத தயிர், ஒரு கப் பாலுக்கு கால் கப் சேர்த்துக் கொள்ளலாம்.
- 2
வேகவைத்த சாதம் ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். சாதம் குழைய வேக வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு வாணலியில எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சை மிளகாய், கரு வேப்பிலை, தாளித்து இவற்றை வடித்த சாதத்தில் சேர்த்துக் கொள்ளவும். பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
காய்ச்சிய பாலை ஒரு கப் சாதத்தில் சேர்த்துக் கொள்ளவும் உப்பு தேவையான அளவு சேர்த்து கொள்ளவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொள்ளவும். தயிர் தேவைக்கேற்ப சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கறிவேப்பிலை கொத்தமல்லி பச்சையாக கொஞ்சம் சேர்த்துக் கொள்ளவும்.கடைசியாக மாதுளம் பழத்தை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 4
சுவையான மாதுளை தயிர் சாதம் தயார். ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பிசைந்து கொண்டாள் சுவை அதிகரிக்கும். வறுத்த முந்திரிப் பருப்பும் சேர்த்து கொள்ளலாம்.
- 5
சுவையான மாதுளை தயிர் சாதம் தயார். தாளிக்கும்போது முந்திரிப் பருப்பு சேர்த்துக் கொண்டால் மேலும் சுவை கூடும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தயிர் சாதம் (thayir saatham recipe in tamil)
#goldenapron3#week12மாட்டுப் பொங்கல் தினத்தில் கொண்டாடப்படும் கணு பண்டிகையில் ஸ்பெஷல் தயிர் சாதம் Nandu’s Kitchen -
-
தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)
#Poojaஇது பாலில் அரிசியை வேக வைத்து செய்த தயிர் சாதம்.எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வழக்காமாக சமையல் செய்யும் ஐயர் சொல்லி குடுத்த முறை.இப்படி செய்தால் சீக்கிரம் தயிர் சாதம் புளிக்காது என்று அவர் சொன்னார்.கோவில்களுக்கு எடுத்து செல்லும் போது,அல்லது டூர் செல்லும் போது இப்படி செய்து எடுத்து செல்லலாம் , நன்றாக இருக்கும்.சீக்கிரம் புளிக்காது. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
சுவையான மாதுளை ஜூஸ் சாதம் (Maathulai juice saatham recipe in tamil)
#onepot.. மாதுளை உடலுக்கு மிக நல்லது.. அதை ஜூஸ் செய்து குடிக்கிறது வழக்கம்... அதை வைத்து வித்தியாசமாக சாதம் கிளறினேன்.. ரொம்ப சுவையாக இருத்தது.. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்... இங்கே உங்களுக்காக... Nalini Shankar -
-
-
-
தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)
# poojaநவராத்திரியின் பத்தாம் நாளான இன்று கடவுளுக்கு தயிர்சாதம் நிவேதனம் செய்வார்கள். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
தயிர் சாதம் /Curd Rice (Thayir saatham Recipe in Tamil)
#Nutrient2தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது. Shyamala Senthil -
-
குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir satham recipe in tamil)
#millet குதிரைவாலி தயிர்சாதம் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதேபோன்றே சாமை,வரகு அரிசி களில் செய்யலாம். Siva Sankari -
வெள்ளரிக்காய் தயிர் சாதம்(cucumber curd rice recipe in tamil)
தயிர் சாதத்தில் வெள்ளரிக்காய் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் .மேலும் வெயில் காலத்திற்கு உடல் சூட்டை தணித்து உடலுக்கு வெயிலினால் இழக்கும் சக்தியை பெற்று தரும். உடனடியாக சாப்பிடுவது என்றால் அரை கப் புளிக்காத தயிர் சேர்த்துக் கொள்ளவும் காலையில் செய்து மதியம் சாப்பிடுவது என்றால் கால் ஸ்பூன் தயிர் மட்டும் பாலில் சேர்த்து கலந்து சாதம் செய்யவும். Meena Ramesh -
பச்சரிசி சீரக சாதம் (Pacharisi seeraga satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் , பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய மற்றும் உடலுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவு சீரக சாதம். குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்றது Vaishu Aadhira
More Recipes
- புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல்(Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
- தண்டு பரமேனியம் (Thandu parameniyam recipe in tamil)
- வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikkaai podimass recipe in tamil)
- மாதுளை ரசம் (Maathulai rasam recipe in tamil)
- உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kurma recipe in tamil)
கமெண்ட்