மட்டன் நெஞ்செழும்பு சூப் (Mutton nenju elumbu soup recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1/2கிலோ மட்டன் நெஞ்செழும்பு
  2. 100கிராம் சின்ன வெங்காயம்
  3. 2பச்சை மிளகாய்
  4. 4தக்காளி
  5. 2டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1_1/2 ஸ்பூன் சீரகம்
  7. 1ஸ்பூன் மிளகு
  8. 1/2ஸ்பூன் கடுகு
  9. 100மில்லி நல்லெண்ணெய்
  10. கல் உப்பு தேவையான அளவு
  11. மஞ்சள் தூள் சிறிதளவு
  12. 1ஸ்பூன் தனியாத்தூள்
  13. 1/2ஸ்பூன் மிளகாய்த்தூள்
  14. 1ஸ்பூன் பட்டர்
  15. கறிவேப்பிலை சிறிது

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    மட்டன் நெஞ்செழும்பை சுத்தம் செய்து அலசி வைக்கவும் குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விட்டு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் தனியாத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின் அலசிய நெஞ்செழும்பை சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 8 விசில் வந்ததும் இறக்கவும்

  4. 4

    ப்ரஷர் அடங்கியதும் திறந்து பட்டர் விட்டு சீரகம் மிளகை கரகரப்பாக பொடித்து சேர்த்து சூடான பட்டரில் வதக்கி கொட்டவும்

  5. 5

    பின் பதினைந்து நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes