இனிப்பு பூந்தி (Inippu boonthi recipe in tamil)

Bavadharani
Bavadharani @cook_24439672

இனிப்பு பூந்தி (Inippu boonthi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 கப் கடலை மாவு
  2. 1 ஸ்பூன் அரிசி மாவு
  3. 1 1/4 கப் சர்க்கரை
  4. 1 ஸ்பூன் நெய்
  5. 8 முந்திரி
  6. 1 சிட்டிகை மஞ்சள் கேசரி தூள்
  7. 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி
  8. 2 சிட்டிகை பேக்கிங் சோடா

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடலை மாவு அரிசி மாவு பேக்கிங் சோடா மற்றும் கேசரி பவுடர் உடன் தண்ணி கலந்து பஜ்ஜி மாவு பதத்திற்கு எடுத்து கொள்ளவும்.

  2. 2

    அடுப்பை குறைவான தீயில் வைத்து எண்ணெய் சூடானதும் ஒட்டை கரண்டியில் மாவு ஊற்றி சொட்டு சொட்டாக விழும் மாதிரி பார்த்து கொள்ளவும்.

  3. 3

    பின்னர் நன்று பொரிந்ததும் ஆற வைக்கவும்.

  4. 4

    3/4 கப் தண்ணீர் 1 1/4 கப் சக்கரை ஏலக்காய் பொடி சேர்த்து பாகு தயார் செய்து கொள்ளவும்

  5. 5

    அதில் அந்த பூந்தி பொரிததை போட்டு ஊற விடவும்.

  6. 6

    நெய்யில் பொரித்த முந்திரியை சேர்த்து கொஞ்ச நேரம் விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bavadharani
Bavadharani @cook_24439672
அன்று

Similar Recipes