இறால் முள்ளங்கி மசாலா (Iraal mullanki masala recipe in tamil)

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

என் பாட்டியின் சமையல் இறால் முள்ளங்கி மசாலா நீங்கள் செய்து பாருங்கள் முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட இது மிகவும் பிடிக்கும். #arusuvai5

இறால் முள்ளங்கி மசாலா (Iraal mullanki masala recipe in tamil)

என் பாட்டியின் சமையல் இறால் முள்ளங்கி மசாலா நீங்கள் செய்து பாருங்கள் முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட இது மிகவும் பிடிக்கும். #arusuvai5

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
4 பரிமாறுவது
  1. 200 கிராம் இறால்
  2. 250 கிராம் முள்ளங்கி
  3. 1கப் நறுக்கிய வெங்காயம்
  4. 1/2 கப் நறுக்கிய தக்காளி
  5. 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை
  6. 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  7. 2 ஸ்பூன் தனியா தூள்
  8. உப்பு தேவையான அளவு
  9. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  10. 1/2 ஸ்பூன் கடுகு
  11. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  12. 1கப் தண்ணீர்
  13. கொத்தமல்லி இலை சிறிது

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

  2. 2

    பச்சை வாடை போகும் வரை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் அதன் பிறகு தக்காளி சேர்த்து உப்பு சேர்த்து 2 அல்லது 3 நிமிடம் மூடி வைத்து வதக்க வேண்டும்.

  3. 3

    தக்காளி வதங்கியவுடன் முள்ளங்கி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் பின்னர் அதில் இறால் சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும் பின்னர் அதில் ஒரு கப் அளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் மூடி வைத்து சமைக்க வேண்டும்.

  4. 4

    எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை சேர்த்து சூடாக பரிமாறவும் சுவையான முள்ளங்கி இறால் தயார்.

  5. 5

    குறிப்பு: முள்ளங்கிக்கு பதிலாக நீங்கள் சுரைக்காய் சேர்க்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes