தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கட்டு மணத்தக்காளி கீரை
  2. 2தக்காளி
  3. 15சின்ன வெங்காயம்
  4. 10பல் பூண்டு
  5. 2வரமிளகாய்
  6. 1/2ஸ்பூன் சீரகத்தூள்
  7. 1ஸ்பூன் கொத்தமல்லி தூள்
  8. 1/2ஸ்பூன் கரம் மசாலா தூள்
  9. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1/2ஸ்பூன் மிளகுத்தூள்
  11. 3டேபிள் ஸ்பூன் வேகவைத்து மசித்த துவரம்பருப்பு
  12. 1லிட்டர் பருப்பு வேகவைத்த தண்ணீர்
  13. 4டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  14. 1டேபிள் ஸ்பூன் நெய்
  15. கல் உப்பு தேவையான அளவு
  16. கொத்தமல்லி தழை சிறிது

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    கீரை ஐ சுத்தம் செய்து அலசி நறுக்கி கொள்ளவும் சின்ன வெங்காயம் பூண்டு ஆகியவற்றை நன்கு விழுதாக அம்மியில் வைத்து தட்டி கொள்ளவும்

  2. 2

    எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வரமிளகாய் சேர்த்து வதக்கி பின் தட்டிய சின்ன வெங்காயம் பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கவும் பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கவும்

  4. 4

    பின் மஞ்சள் தூள் தனியாத்தூள் சீரகத்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்

  5. 5

    பின் வேகவைத்து மசித்த துவரம்பருப்பு மற்றும் பருப்பு வேகவைத்த தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  6. 6

    பின் பாதியாக சுண்டியதும் நெய் விட்டு மிளகுத்தூள் சேர்த்து வதக்கி பின் ஊற்றி கிளறி இரண்டு நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கவும்

  7. 7

    இதை அப்படியே பருகலாம் அல்லது வடிகட்டி கொத்தமல்லி தழை சேர்த்து சூடாக க்ளியர் சூப்பாக பரிமாறலாம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes