சீஸ் இல்லாமல் வெஜிடபிள் பிஸ்சா

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#hotel
இன்றைக்கு நாம் எந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே சுலபமாக வெஜிடபிள் பிஸ்சா ஹோட்டல் சுவையில் எப்படி செய்வது என்று பாப்போம்.

சீஸ் இல்லாமல் வெஜிடபிள் பிஸ்சா

#hotel
இன்றைக்கு நாம் எந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே சுலபமாக வெஜிடபிள் பிஸ்சா ஹோட்டல் சுவையில் எப்படி செய்வது என்று பாப்போம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30-40 நிமிடம்
4 நபர்
  1. 1/2கப் மைதா,
  2. 1/4கப் தயிர்,
  3. 1டீஸ்பூன் பேக்கிங் பவுடர்,
  4. 1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா,
  5. 1/4கப் பால்,
  6. 1டீஸ்பூன் கார்ன் பவுடர்,
  7. 2டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு,
  8. 1டீஸ்பூன் காய்ந்த மிளகாய் விதைகள்,
  9. 2டீஸ்பூன் தக்காளி சாஸ்,
  10. 1/2தக்காளி நறுக்கியது,
  11. 1/2வெங்காயம் நறுக்கியது,
  12. 1/4குடைமிளகாய் நறுக்கியது,
  13. 2டீஸ்பூன் நறுக்கிய முட்டைகோஸ்,
  14. தேவையான அளவு உப்பு,
  15. தேவையான அளவு தண்ணீர்,
  16. ஒரு டீஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30-40 நிமிடம்
  1. 1

    1/2 கப் மைதா, 1/4 கப் தயிர், 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர், 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா,தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு போல் உருட்டி வைக்கவும்.மாவை 15 நிமிடம் தனியாக ஊற விடவும்.

  2. 2

    பிஸ்சாவுக்கு வைட் சாஸ் தயார் செய்ய ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி 2 டீஸ்பூன் மைதா சேர்த்து கட்டி ஏதும் வராமல் கலக்கவும்.அடுப்பை முழுவதுமாக சிம்மில் வைக்கவும்.

  3. 3

    இப்போது 1/4 கப் பால், 1/2 கப் தண்ணீர், 1 டீஸ்பூன் கார்ன் பவுடர், உப்பு சேர்த்து சாஸ் கெட்டியாகும் வரை காத்திருக்கவும்.

  4. 4

    சாஸ் கெட்டியானதும் பொடியாக வெட்டி வைத்த ஒரு டீஸ்பூன் பூண்டு சேர்த்து கலக்கி அடுப்பை ஆப் செய்யவும்.

  5. 5

    பிஸ்சா ரெட் சாஸ் தயார் செய்ய ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் விதைகள், 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு, 2 டீஸ்பூன் தக்காளி சாஸ் சேர்த்து கலக்கவும். ரெட் சாஸ் இப்போது தயார்.

  6. 6

    ஊற வைத்த மைதா மாவை எடுத்து பெரிய சப்பாத்தி போல உருட்டவும்.ஒரு தட்டில் எண்ணெய் முழுதாக தடவி அதன் மேலே சப்பாத்தியை வைக்கவும்.ஒரு போர்க் வைத்து சப்பாத்தில் ஓட்டைகள் போடவும்.

  7. 7

    அதன் மேலே ரெட் சாஸ் பின்னர் வைட் சாஸ் தடவவும். நீளமாக வெட்டி வைத்த தக்காளி, வெங்காயம், குடைமிளகாய், முட்டைகோஸ் போன்றவற்றை மேலே தூவவும்.

  8. 8

    அடுத்து இதனை ஒரு கடாயில் 20 நிமிடம் மூடி வைத்து சிம்மில் வேகவிடவும். 20 நிமிடம் கழித்து சுவையான பிஸ்சா தயார்.

  9. 9

    இப்போது பிஸ்சாவை துண்டுகளாக நறுக்கலாம் இதன் மேலே கொஞ்சம் கொத்தமல்லி, புதினா இலைகள் தூவி பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes