ஹாட் சிக்கன் சூப்

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

ஹாட் சிக்கன் சூப் மிகவும் பிரபலமான சூப் வகைகளில் ஒன்று ஹாட் அண்ட் சோர் சிக்கன் சூப் மாதிரியான சுவை கொண்டது. இதை எளிதாக செய்யலாம். #hotel #goldenapron3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1கப் எலும்புடன் சேர்ந்த சிக்கன்
  2. 1/2கப் நறுக்கிய வெங்காயம்
  3. 1/4கப் நறுக்கிய தக்காளி
  4. 2டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1/2கப் நறுக்கிய காய் கறிகள்(கோஸ், கேரட், பீன்ஸ்)
  6. 1முட்டை
  7. 1/2டீ ஸ்பூன் சீரகம்
  8. 1டீ ஸ்பூன் மிளகு
  9. 1டீ ஸ்பூன் மிளகு தூள்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. 1டீ ஸ்பூன் சோள மாவு
  13. 4கப் தண்ணீர்
  14. 1டீ ஸ்பூன் சோயா சாஸ்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் சிக்கன், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம்,தக்காளி, சீரகம் மிளகு, தண்ணீர், உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து 3 விசில் வரை நன்றாக குக்கரில் வேக வைக்கவும்.

  2. 2

    பிறகு ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் பின்னர் அதில் ஒரு ஸ்பூன் அளவு சோயா சாஸ் செய்ய வேண்டும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

  3. 3

    குக்கரில் இருக்கும் சிக்கன் ஸ்டாக் சிக்கனை நீக்கிவிட்டு ஒரு பிளெண்டர் வரும் இரண்டு அல்லது மூன்று முறை விப் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

  4. 4

    இப்போது காய்கறியுடன் சிக்கன் ஸ்டாக் சேர்க்க வேண்டும். வெந்த சிக்கனை துண்டு துண்டுகளாக செய்து அதனுடன் சேருங்கள். இப்பொழுது ஒரு வடிகட்டியில் போய் முட்டையுடன் உப்பு மிளகு சேர்த்து நன்றாக அடித்துக் கொண்டு வடிகட்டி வைத்து அதில் மெதுவாக ஊற்ற வேண்டும் (என் புகைப்படத்தை பார்க்கலாம்).

  5. 5

    முட்டை சேர்த்து பிறகு சூப் குறைந்தது இரண்டு நிமிடம் மட்டும் குடித்தால் போதும் பின்னர் தேவையான அளவு மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes