மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#sambarrasam
மிளகு சீரகம் வறுத்து சேர்த்து செய்த ரசம். ஜலதோஷம் , காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)

#sambarrasam
மிளகு சீரகம் வறுத்து சேர்த்து செய்த ரசம். ஜலதோஷம் , காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. எலுமிச்சை அளவுபுளி
  2. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  3. தேவையானஅளவு உப்பு
  4. 1/2 டீஸ்பூன் பெருங்காய பொடி
  5. 1/2 டீஸ்பூன் எண்ணெய்
  6. தாளிக்க:
  7. 1 டீஸ்பூன் நெய்
  8. 1/2 டீஸ்பூன் கடுகு
  9. 1/2 டீஸ்பூன் சீரகம்
  10. 1மிளகாய் வற்றல்
  11. 1ஆர்க்கு கறிவேப்பிலை
  12. வறுத்து பொடித்து செய்ய:
  13. 1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  14. 1 டீஸ்பூன் மல்லிவிதை
  15. 1டீஸ்பூன் மிளகு
  16. 1 டீஸ்பூன் சீரகம்
  17. 1மிளகாய் வற்றல்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்

  2. 2

    இதை மிக்ஸியில் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    பாத்திரத்தில் புளிக் கரைசல் மஞ்சள்தூள், உப்பு,பெருங்காயம் சேர்த்துக் கொதிக்கவிடவும்

  4. 4

    புளி பச்சை வாசனை போனதும் அரைத்த விழுதை சேர்த்து பொங்க விட்டு இறக்கவும்

  5. 5

    நெய்யில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
அன்று

கமெண்ட் (6)

Similar Recipes