சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa

joycy pelican
joycy pelican @cook_20701700

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்
#cookwithfriends#soup#shilmaprabaharan

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சிக்கன் ஸ்டாக் செய்ய;
  2. 400 கிராம் சிக்கன்
  3. 10 கப் தண்ணீர்
  4. 1வெங்காயம் நருகியது
  5. 7_8 பல் பூண்டு
  6. அரைக்க;
  7. 1 வெங்காயம்
  8. 1 தக்காளி
  9. 1 பச்சை மிளகாய்
  10. 1ஸ்பூன் மிளகு
  11. 1 சிறிய துண்டு இஞ்சி
  12. 3,4பல் பூண்டு
  13. 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி இலை
  14. துப்பா செய்ய;
  15. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  16. சிக்கன் ஸ்டாக்
  17. அரைத்த விழுது
  18. 1கப் கேரட்
  19. 1 கப் முட்டைகோஸ்
  20. தேவையானஅளவு உப்பு
  21. வேகவைத்த நூடுல்ஸ்
  22. சிக்கன் ஸ்டாக்
  23. கால் ஸ்பூன் சோயா சாஸ்
  24. தேவையானஅளவு ஸ்பிரிங் ஆனியன்
  25. தேவையானஅளவு கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் சிக்கன்,தண்ணீர், சேர்த்து நறுக்கிய வெங்காயம், பூண்டு,சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். குறைந்தது 45நிமிடம் கொதித் தால் போதுமானது. பிறகு வடிகட்டி மூலம் தண்ணீரை மட்டும் வடித்து கொள்ளவும்.சிக்கனை தனியா எடுத்து வைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் உப்பு, நூடுல்ஸை போட்டு 4,5 நிமிடம் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி வெங்காயம்,பச்சை மிளகாய் மிளகு,இஞ்சி,பூண்டு கொத்தமல்லி இலை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து 3,4 நிமிடம் வதக்கவும்.

  5. 5

    வதக்கிய பின்னர் கேரட் முட்டைகோஸ் சேர்த்து 2நிமிடம் வதக்கவும். அதனுடன் சிக்கன் ஸ்டாக்ஸ், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி விடவும்.

  6. 6

    ஒரு பவுலில் வேகவைத்த நூடுல்சை போட்டு சிக்கன் ஸ்டாக் கொஞ்சம் சேர்த்து வேக வைத்த சிக்கன் சிறிது சேர்த்து கொஞ்சம் சோயா சாஸ் சேர்த்து அதில் ஸ்பிரிங் ஆனியன் கொத்தமல்லியை சேர்த்து பரிமாறலாம்.

  7. 7

    இப்போது சுவையான சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

joycy pelican
joycy pelican @cook_20701700
அன்று

Similar Recipes