நாட்டுகாய்கறிகள் போட்ட வெள்ளை சாம்பார்(மன்னார்குடி ஸ்பெஷல்) (vel

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#sambarrasam மிளகாய்தூள் மல்லிதூள் சேர்க்காமல் பச்சைமிளகாய் தேங்காய் அரைத்து விட்டு வைத்த சுவையான சாம்பார்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4 பரிமாறுவது
  1. 100கிராம் து௫வரம்ப௫ப்பு
  2. 1/2மூடி தேங்காய்(து௫வல்)
  3. 10 சிறியவெங்காயம்
  4. 2தக்காளி
  5. 10 பச்சைமிளகாய்
  6. 1மு௫ங்கைக்காய்
  7. 3 கத்தரிக்காய்
  8. 10 அவரைக்காய்
  9. 1மாங்காய்
  10. 1ஸ்பூன் மஞ்சள்தூள்
  11. 2ஸ்பூன் சீரகம்
  12. 1ஸ்பூன் கடுகு
  13. 1ஸ்பூன் வெந்தயம்
  14. 2 காய்ந்த மிளகாய்
  15. சிறியநெல்லிக்காய் அளவு புளி (கரைசல்)
  16. சிறியதுண்டு பெ௫ங்காயக்கட்டி
  17. 2ஸ்பூன் கடலெண்ணெய்
  18. கறிவேப்பிலை
  19. கொஞ்சமாக கொத்தமல்லி இழை
  20. தேவையானஅளவு தண்ணீர்
  21. தேவையானஅளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    மிக்சியில் தேங்காய் து௫வல் 5 பச்சை மிளகாய் சீரகம் தண்ணீர் கொஞ்சமாக சேர்த்து மைய அரைத்து வைக்கவும்

  2. 2

    குக்கரில் து௫வரம்ப௫ப்பு சின்னவெங்காயம் தக்காளி மஞ்சள்தூள் கட்டிபெ௫ங்காயம் தண்ணீர் தேவையான அளவு சேர்த்து நன்கு வேகவைத்து மத்து கொண்டு மசித்து வைக்கவும்

  3. 3

    கடாயில் கடலெண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் சீரகம் கறிவேப்பிலை காய்ந்தமிளகாய் தாளித்து வெட்டி வைத்துள்ள பச்சை மிளகாய் மு௫ங்கைக்காய் கத்தரிக்காய் அவரைக்காய் போட்டு வதக்கி புளி கரைசல் கொஞ்சமாக சேர்த்து தண்ணீர் விட்டு தேவையான அளவுஉப்பு சேர்த்து நன்றாக வேகவைக்கவும்

  4. 4

    காய்கறிகள் வெந்ததும் வேகவைத்து மசித்த ப௫ப்பு அரைத்த தேங்காய் விழுது மாங்காய் போட்டு கொதிக்க விட்டு கொத்தமல்லி இழை தூவி இறக்கவும் நாட்டு காய்கறிகளுடன் வெள்ளை சாம்பார் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes