துவரம்பருப்பு இட்லி சாம்பார்  (plain thur dal sambar for idly)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பேர்
  1. 1/2 கப் துவரம் பருப்பு
  2. 10 சாம்பார் வெங்காயம்
  3. 1தக்காளி
  4. புளி சிறிய எலுமிச்சை அளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. பொடிக்க :
  7. 1டீஸ்பூன் தனியா
  8. 1டீஸ்பூன் சீரகம்
  9. 3 வற்றல் மிளகாய்
  10. 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  11. தாளிக்க :
  12. 1டீஸ்பூன் நெய்
  13. 1/4டீஸ்பூன் கடுகு
  14. 1வற்றல் மிளகாய்
  15. 1பச்சை மிளகாய்
  16. ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
  17. கறிவேப்பிலை
  18. மல்லி இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    துவரம் பருப்பை கழுவி, குக்கரில் மூன்று விசில் வைத்து எடுக்கவும்.

  2. 2

    பொடிக்கக்கொடுத்துள்ள பொருட்களை, வெறும் வாணலில் வறுத்து, மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.

  3. 3

    வெங்காயம், தக்காளி, மல்லி இலை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    புளியை கரைத்து சாறு எடுத்து வைக்கவும்.

  5. 5

    கடாயில் நெய் சேர்த்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், வறுத்து பொடித்துள்ள பொடி, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, புளிக்கரைசல், வெந்த பருப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வேக வைக்கவும்.

  6. 6

    பின்னர் தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, மல்லி இலை, பெருங்காயத்தூள் சேர்த்து பொரிந்ததும், வற்றல் மிளகாய், பச்சை மிளகாய் கீறிப்போட்டு, நன்கு வதங்கியவுடன், கொதிக்கும் பருப்பில் சேர்த்து, ஒரு நிமிடம் மூடி வைத்து இறக்கவும்.

  7. 7

    இப்போது சுவையான, கம கம வென நெய் மனதுடன் இட்லி சாம்பார் தயார். இந்த சாம்பார் இட்லி, உளுந்து வடை, பொங்கல், தோசைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். கொஞ்சம் தண்ணீர் போல் இருக்கும் இந்த சாம்பாரை அனைவரும் செய்து சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes