ஸ்பைசி சிக்கன் பாட்லி

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#cookwithfriends
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நண்பர்கள் தின ஸ்பெஷலான சிக்கன் பாட்லி. இது ஒரு புதுமையான சுவையான ஸ்டார்டர் ரெசிபி. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 நபர்
  1. 200 கிராம் போன்லெஸ் சிக்கன்
  2. 1 டீஸ்பூன் மிளகாய்தூள்
  3. 1 டீஸ்பூன் கார்ன் பவுடர்
  4. 1/4 எலுமிச்சை ஜூஸ்
  5. 1 பெரிய வெங்காயம்
  6. 1 டீஸ்பூன் இஞ்சி
  7. 1 டீஸ்பூன் பூண்டு
  8. ஒண்டரை கப் மைதா
  9. தேவையானஅளவு தண்ணீர்
  10. தேவையானஅளவு உப்பு
  11. தேவையானஅளவு எண்ணெய்
  12. கொஞ்சம்கொத்தமல்லி இலைகள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் 200 கிராம் போன்லெஸ் சிக்கன் எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

  2. 2

    பின்னர் 1/2 டீஸ்பூன் மிளகாய்தூள், 1/2 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் கார்ன் பவுடர், 1/4 எலுமிச்சை ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

  3. 3

    அடுத்து சூடான எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.

  4. 4

    ஒரு கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

  5. 5

    அடுத்து 1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு பொடியாக நறுக்கி ஒரு நிமிடம் வதக்கி, 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து பொறித்து வைத்த சிக்கன் துண்டுகளை போடவும்.

  6. 6

    பின்னர் ஒண்டரை கப் மைதா, 1 டீஸ்பூன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசையவும்.மாவில் இருந்து சிறு உருண்டைகளாக பிரித்து எடுக்கவும்.

  7. 7

    இப்போது ஒரு உருண்டை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து சிக்கன் மசாலாவை வைக்கவும்.

  8. 8

    சப்பாத்தியை பானை போல் மடித்து வைக்கவும். இதே போல் எல்லா உருண்டைகளையும் அடுக்கி வைக்கவும்.

  9. 9

    கடைசியாக சூடான எண்ணையில் பொறித்து எடுக்கவும். சுவையான ஸ்பைசி சிக்கன் பாட்லி சுவைக்க தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes