எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 500கிராம் மட்டன் கீமா
  2. 9 மீதமான இடியப்பம்
  3. 4 வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. 2 பச்சை மிளகாய்
  6. 2டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 3 முந்திரி
  8. 1பட்டை
  9. 3 ஏலக்காய்
  10. 4கிராம்பு
  11. 1பிரிஞ்சி இலை
  12. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  13. 11/2டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  14. 1டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  15. 11/2டீஸ்பூன் கரம்மசாலா
  16. 1டீஸ்பூன் சோம்பு தூள்
  17. உப்பு தேவையா அளவு
  18. எண்ணெய் தேவையான அளவு
  19. 1/2டீஸ்பூன் மிளகு தூள்
  20. 1/2கைப்பிடி மல்லி இலை
  21. 1/2கைப்பிடி புதினா இலை
  22. 1கொத்து கறிவேப்பிலை
  23. நெய் தேவையான அளவு
  24. தண்ணீர் தேவையா அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு குக்கரில் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்,1/2டீஸ்பூன் மல்லி தூள், உப்பு, 1/2டீஸ்பூன் கரம்மசாலா மற்றும் மட்டன் கீமா சேர்த்து அத்துடன் தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு எடுக்கவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

  3. 3

    ஒரு மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, முந்திரி சேர்த்து அரைத்து எடுக்கவும் அதனை இத்துடன் சேர்க்கவும்

  4. 4

    பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்

  5. 5

    அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம்மசாலா தூள், மிளகுத்தூள், சோம்பு தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும் அத்துடன் சிறிது மட்டன் வேகவைத்த தண்ணீர் சேர்த்து நாற்றாக வதக்கவும்

  6. 6

    இப்பொழுது அதில் மட்டன் சேர்த்து கிளறிவிடவும்

  7. 7

    அத்துடன் மல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து நன்றாக கலந்துவிடவும் இப்பொழுது மட்டன் கிரேவி ரெடி

  8. 8

    இடியாப்பத்தை நன்றாக பிய்த்துப்போடவும்

  9. 9

    ஒரு பத்தரத்தில் ஒரு அதுக்கு இடியப்பம் பித்து போட்டது அதன்மேல் சிறிது நெய் பின் சிறிது மல்லி இலை அதன்மீது சிறிது மட்டன் கிரேவி அவ்வாறு திரும்பவும் செய்யவும்

  10. 10

    எல்லாம் நிரம்பியது அந்த பாத்திரத்தை அடுப்பில் சிமில் வைத்து 5-7 நிமிடம் தம் போடவும்

  11. 11

    மட்டன் இடியப்பம் தம் பிரியாணி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (4)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
வேற லெவல் சூப்பர் சிஸ்டர்

எழுதியவர்

Soulful recipes (Shamini Arun)
அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

Similar Recipes