தேவையான பொருட்கள்

  1. சிக்கன் - 200 கிராம்
  2. இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்
  3. மிளகாய் பொடி - 3டேபிள்ஸ்பூன்
  4. மஞ்சள்தூள் - கால் டேபிள்ஸ்பூன்
  5. மல்லித்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
  6. எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
  7. வெண்ணை - 5 டேபிள்ஸ்பூன்
  8. வெங்காயம் - 2
  9. தக்காளி - 1
  10. கரம் மசாலா - ஒரு டேபிள்ஸ்பூன்
  11. க்ரீம் - ஒரு டேபிள் ஸ்பூன்
  12. உப்பு
  13. காய்ந்த வெந்தய இலை - அரை டேபிள்ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், மல்லி தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

  2. 2

    அத்துடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து ஊறவிடவும்.

  3. 3

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு 80% வேகவிட்டு எடுக்கவும்.

  4. 4

    அதே வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி,மிளகாய்த்தூள், கரம்மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  5. 5

    கூடவே தண்ணீர் சேர்த்து நன்றாக வெந்ததும் ஆற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  6. 6

    அதே வாணலியில் வெண்ணெய் விட்டு உருகியதும் சீரகம் கிராம்பு சேர்த்து பொரிந்ததும் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.

  7. 7

    கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மசாலா வேகவைக்கும் கிரேவி கொஞ்சம் கெட்டியானதும் வேகவைத்த சிக்கன் துண்டுகளை அதில் சேர்த்து ஐந்து நிமிடம் சமைக்கவும்

  8. 8

    க்ரீம் சேர்த்து அலங்கரிக்கவும் பட்டர் சிக்கன் ரெடி ஆனதும் நான் சப்பாத்தி புரோட்டா சாப்பிடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
அன்று
Chennai

Similar Recipes