குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#leftover
வீட்டில் பொருட்கள் வீணாகும் அளவிற்கு மிச்சமாக பெரும்பாலும் செய்வது கிடையாது. அப்படியிருந்தும் சில நாட்கள் ஏதாவது மீந்து விடும். இன்று காலையில் செய்த இட்லி 4 மீண்டு விட்டது. மாலையில் வேகவைத்த குச்சி கிழங்கு 1 மீந்து விட்டது. இரண்டையும் வைத்து இரவு டிபனுக்கு குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை செய்துவிட்டேன். சுவையும் நன்றாக இருந்தது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2பேர்
  1. 4இட்லி
  2. 1துண்டு குச்சி கிழங்கு வேக வைத்தது
  3. 1பெரிய வெங்காயம்
  4. 3பச்சை மிளகாய்
  5. 3வர மிளகாய்
  6. 1/2ஸ்பூன் மிளகு
  7. 1/2ஸ்பூன் சீரகம்
  8. 3ஸ்பூன் இட்லி பொடி
  9. 2ஸ்பூன் எண்ணெய்
  10. 1ஸ்பூன் கடுகு
  11. 1ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  12. 1/2ஸ்பூன் பெருங்காயத்தூள்
  13. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
  14. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  15. உப்பு விருப்பம் என்றால்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மிகுதியான இட்லியை தண்ணீரில் நனைத்து பிழிந்துவிட்டு உதிர்த்துக் கொள்ளவும். மிகுதியான கிழங்கை பொடியாக அறிந்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும் பச்சைமிளகாய் வரமிளகாய் பொடியாக அரிந்து கொள்ளவும். அரை ஸ்பூன் சீரகம் அரை ஸ்பூன் மிளகை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் மூன்று ஸ்பூன் இட்லி பொடியை எடுத்து வைத்துக் கொள்ளவும் தாளிப்பதற்கு எண்ணெய் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை கொத்தமல்லி ரெடி செய்து கொள்ளவும்.

  2. 2

    வானலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு அதில் கடுகு உளுத்தம் பருப்பு மிளகு சீரகத்தூள் பெருங்காயத் தூள்.மஞ்சள் தூள் சேர்த்து சிவந்தவுடன் பச்சை மிளகாய் வரமிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் பொடியாக அரிந்த கிழங்கை சேர்த்து சூடேறும் வரை வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    பிறகு உதிர்த்து வைத்த இட்லியை சேர்த்து விட்டு அதன் பிறகு இட்லி பொடியை தூவிஎல்லாவற்றையும் ஒன்றாக கிளறி நன்கு சூடேறும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.ஏற்கனவே இட்லியும் கிழங்கிலும் உப்பு இருப்பதால் தேவை என்றால் உப்பு சேர்த்துக் கொள்ளவும். சுவையான சூடான குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை ரெடி. மாலை நேரத்திலும் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes