மிளகு ரவா ரோஸ்ட்(Pepper paper Rava Roast)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#pepper மொறுமொறு பேப்பர் ரவா ரோஸ்ட் (Hotel style Rava roast)

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 100 கிராம் ரவை
  2. 100 கிராம் பச்சரிசிமாவு
  3. 2டேபுள் ஸ்பூன் மைதா
  4. 2 ஸ்பூன் தயிர்
  5. 1 ஸ்பூன் சீரகம்
  6. 1 ஸ்பூன் மிளகு
  7. சிறியதுண்டு இஞ்சி
  8. கறிவேப்பிலை
  9. கொத்தமல்லி இழை
  10. உப்பு
  11. தண்ணீர்
  12. நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    ரவையை மட்டும் தயிர் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி பின்பு பாத்திரத்தில் ஊற்றி மைதா பச்சரிசிமாவு தேவையான அளவு உப்பு சீரகம் மிளகை ஒன்று பாதியாக பொடித்தது இஞ்சி கறிவேப்பிலை கொத்தமல்லி இழை பொடி பொடியாக நறுக்கி 500மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும்.

  2. 2

    ரவாதோசை பேட்டர் தண்ணீயாக இ௫க்கவேண்டும் அப்படியி௫ந்தால்தான் மொறுமொறு பேப்பர் போல ரவா தோசை கிடைக்கும்.பின்பு முடி 20 நிமிடம் ஊறவைக்கவும்

  3. 3

    20நிமிடம் ஊறிய பின்பு அடுப்பில் தவா வைத்து சூடாக்கி தவா சுற்றிலும் ஊற்றி பின்பு நடுவில் தெளித்ததுபோல ஊற்றவேண்டும். வரலைனா கையால தெளித்து விடுங்கள் தோசை சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு நடுவிலும் நல்லெண்ணெய் விட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும்

  4. 4

    ஊற்றியவுடன் கரண்டி போடக்கூடாது நன்கு வெந்து சிவந்து வ௫ம் பின்பு தி௫ப்பி போட்டு எடுக்கவும் சாப்பிடரெடி சுவையான மொ௫மொ௫ பேப்பர் போன்ற ரவா ரோஸ்ட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes