செட்டிநாடு தட்டப்பயறு குழம்பு

Sharanya
Sharanya @maghizh13

இதை செய்து ருசித்து பாருங்கள்
#goldenapron3
#pepper

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1கப் தட்டப்பயறு (வறுத்து தண்ணீர் ஊற்றி 4 மணிநேரம் ஊற வைக்கவும்)
  2. 15 சின்ன வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 10பல் தட்டிய பூண்டு
  5. புளி நெல்லிக்காய் அளவு (தண்ணீர் ஊற்றி ஊற வைத்தது)
  6. 2ஸ்பூன் சாம்பார் தூள்
  7. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1/2ஸ்பூன் கடுகு
  9. 1/2ஸ்பூன் உளுந்து
  10. 1ஸ்பூன் மிளகு
  11. 1/2ஸ்பூன் சீரகம்
  12. 4ஸ்பூன் நல்லெண்ணெய்
  13. 1கொத்து கறிவேப்பிலை
  14. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஊற வைத்த தட்டப்பயறு, சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்

  2. 2

    பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து அதில் புளி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்

  3. 3

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், மிளகு, கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்

  4. 4

    நன்கு வதங்கியதும் அதை கொதிக்கும் தட்டப்பயறில் கொட்டி 1 கொதி வந்ததும் இறக்கி பரிமாறினால் சுவையான செட்டிநாடு தட்டப்பயறு குழம்பு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharanya
Sharanya @maghizh13
அன்று

Similar Recipes