சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் ராகி மாவு, கால் கப் அரிசி மாவுடன் சிட்டிகை உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய், தேவையான அளவு வெந்நீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
- 2
பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் வைத்து இடியாப்பமாக இட்லி தட்டில் பிழியவும்.
- 3
பிழிந்த இடியாப்பத்தை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
- 4
வெந்ததும் எடுத்து ஆறவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.
- 5
கடாயில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 6
மிளகுப் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். உதிர்த்து வைத்த ராகி இடியாப்பம் சேர்த்துக் கிளறி இறக்கவும். சூடாகப் பரிமாறவும். தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை. நெய் மணமும், மிளகின் காரமும் சுண்டி இழுக்கும்.
- 7
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கம்பு மாவு இடியாப்பம்
#காலைஉணவுகள்கம்பு சிறு தானியங்களில் ஒன்று. ஊட்டச்சத்து மிக்கது. கம்பை சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான போது இடியாப்பம் செய்யலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கம்பு மாவு இடியாப்பத்தை விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
ஆரோக்கியமான ராகி கஞ்சி
#millet உங்கள் குழந்தையின் உணவில் நீங்கள் இணைக்க வேண்டிய ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று ராகி ஆகும், இது பல நன்மைகள் இருப்பதால் இது ஒரு சூப்பர்-உணவு என்று அழைக்கப்படுகிறது. ராகி நார்ச்சத்து நிறைந்த மூலமாகவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. - எடை கட்டுப்பாடு, நீரிழிவு நோய் மற்றும் உடலை குளிர்விக்க ராகி சிறந்த உணவு.எடை இழப்புக்கு உதவுகிறது - ராகியில் உள்ள இயற்கையான கொழுப்பு உள்ளடக்கம் மற்ற அனைத்து தானியங்களையும் விட குறைவாக உள்ளது. Swathi Emaya -
காஞ்சிபுரம் இட்லி
#காலைஉணவுகள்பட்டுக்குப் பெயர் போன காஞ்சிபுரம் இட்லிக்கும் பெயர் போனது தான். காஞ்சிபுரம் இட்லி மிகவும் புகழ் பெற்ற உணவு. வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்மடுவது. நாம் வழக்கமாகச் செய்யும் இட்லியைப் போலல்லாமல் காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையும் சேர்க்கும் பொருட்களும் மாறுபடும். காஞ்சிபுரம் இட்லி பெரிய குடலைகளில் மந்தார இலைகள் வைத்து செய்யப் படும். ஒரு இட்லி இரண்டு கிலோ எடை கூட இருக்கும். நாம் வீட்டில் செய்யும் போது சிறிய டம்ளர்கள் அல்லது திட்டங்களில் செய்யலாம். Natchiyar Sivasailam -
புரொட்டீன் பால்ஸ்
நம் உடலுக்கு தேவையான புரொட்டீன் சத்து பயறு வகைகளில் நிறைந்துள்ளது. கறுப்பு உளுந்தை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. கறுப்பு உளுந்து நம் முழு உடல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. பெண்குழந்தைகளுக்கு மாதவிடாயை சீராக்கும். மாதவிடாயின் போது ஏற்படும் வலியைக் குறைக்கும். இடுப்பெலும்பு வலுவடையும். உளுந்தைப் பயன் படுத்தி பல்வேறு உணவு வகைகளைத் தயாரிக்கலாம். Natchiyar Sivasailam -
புட்டமுது
#steamதிருச்செந்தூர் முருகன் கோவிலில் புட்டமுது பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தப் புட்டமுதை பண்டிகை நாட்களில் செய்து இறைவனுக்குப் படைத்து இறைவன் அருள் பெறலாம். Natchiyar Sivasailam -
ராகி ரொட்டி
#lockdown #book #lockdown2 #லாக்டவுன்மிகவும் சத்தான ராகியில் கோதுமையை விட மிருதுவான ருசியான சப்பாத்தி செய்முறை இதோ!! Raihanathus Sahdhiyya -
-
ட்ரை ஃப்ரூட்ஸ் புலாவ்
#cookwithfriendsஇது வழக்கமான புலாவாக இல்லாமல் குங்குமப்பூ, பாதாம், வால்நட், முந்திரிப் பருப்பு சேர்த்து சமைக்கப் பட்டது. குங்குமப்பூவின் நிறமும், ட்ரை ஃப்ரூட்ஸின் சுவையும் புலாவின் தனித்துவம். ஒரு கிரேவியோடு சரியான காம்போவாக இருக்கும். Natchiyar Sivasailam -
-
-
-
சொதிக்குழம்பு
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறைதிருநெல்வேலி புகழ் சொதிக்குழம்பு. எங்களது திருமணங்கள் பெண் வீட்டில் தான் நடைபெறும். மூன்று நாட்கள் திருமணக் கொண்டாட்டம் தொடரும். முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு தொடங்கி திருமணத்திற்கு மறுநாள் காலை பலகாரப் பந்தி என்ற காலை விருந்து வரை பெண் வீட்டார் விருந்து அளிப்பார்கள். திருமணத்திற்கு மறுநாள் மதிய விருந்து மறுவீட்டுச் சாப்பாடு என்று மாப்பிள்ளை வீட்டார் அளிப்பார்கள். அந்த விருந்தில் தவறாமல் சொதிக்குழம்பு இடம் பெறும். Natchiyar Sivasailam -
பருத்திப் பால்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிபருத்திப் பால் மழை , குளிர் காலங்களுக்கு ஏற்றது.சளித் தொல்லைக்கு அருமையான மருந்து.கடின உழைப்பால் வரும் உடல் சோர்வை நீக்கும்.மூன்று நாட்கள் மாலை வேளைகளில் பருத்திப் பாலும் , இரவில் சுக்குக் கஷாயமும் எடுத்துக் கொண்டால் சளி , இருமல் பறந்து விடும். Mallika Udayakumar -
-
த்ரீ இன் ஒன் சுரைக்காய் அடை
#breakfastசுரைக்காயை பலர் விரும்ப மாட்டார்கள். அதே சுரைக்காயை சேர்த்து அடை செய்து தரும் போது விரும்பி உண்பார்கள். செய்து பாருங்கள். அரிசி, பருப்பு வகைகள், சுரைக்காய், வெங்காயம், கறிவேப்பிலை என கார்போஹைட்ரேட், புரோட்டின்கள், விட்டமின்கள் நிறைந்த ஒரு முழுமையான பிரேக்ஃபாஸ்டை குடும்பத்தினருக்கு அளித்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
-
பிரவுன் சட்னி
#சட்னி & டிப்ஸ்எங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்தமான சட்னி பிரவுன் சட்னி. இட்லியும் பிரவுன் சட்னியும் கொடுத்தால் ஒரு இட்லி அதிகமாகவே சாப்பிடுவார்கள். இட்லி, தோசை , சப்பாத்தி, தயிர் சாதம், லெமன் சாதம், மாங்காய் சாதம் எல்லாவற்றுக்கும் பிரவுன் சட்னி சூப்பரா இருக்கும். பிரயாணங்களின் போது கொண்டு செல்ல மிகவும் ஏற்றது. Natchiyar Sivasailam -
-
பிரவுன் ரைஸ் கொழுக்கட்டை
#4#குக்பேட்ல் என் முதல் ரெசிபிபிரவுன் ரைஸ் கொழுக்கட்டை ஒரு சத்தான, சுவைமிக்க, ஆரோக்கியமான ரெசிபி. கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. Natchiyar Sivasailam -
கோபி மஞ்சூரியன்
#மகளிர்எனக்கு மிகவும் பிடித்த கோபி மஞ்சூரியனும், பனீர் பிரியாணியும் Natchiyar Sivasailam -
முந்திரிக் கொத்து
#deepavaliநெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய இனிப்பு முந்திரிக் கொத்து. தென் மாவட்டங்களில் திராட்சை பழத்தை கொடி முந்திரிப் பழம் என்று சொல்வது வழக்கம். இந்த இனிப்பு உருண்டைகள் மூன்று மூன்றாக எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். பார்ப்பதற்கு திராட்சை கொத்து போல் தோற்றம் இருப்பதால் முந்திரிக் கொத்து என்று பெயர். Natchiyar Sivasailam -
மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். Natchiyar Sivasailam -
-
-
👩🍳 இடியாப்பம் 👩🍳
#combo3 காலை வேளை உணவாக அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகளை உண்பது மிகவும் ஆரோக்கியமானது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய ஒரு காலை உணவு வகை தான் இடியாப்பம் Ilakyarun @homecookie -
-
கத்தரிக்காய் சட்னி
#சட்னிமற்றும்டிப்ஸ்கத்தரிக்காய் கொத்சு செய்ய நேரமில்லாத காலை வேளையில் மிகவும் சுலபமாக செய்யலாம். சுவை அருமை. காரத்திற்கேற்ப மிளகாய் வத்தல் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். இட்லி, தோசை, சாதத்திற்கு சுவையாக இருக்கிறது. Natchiyar Sivasailam -
-
More Recipes
கமெண்ட் (2)