முருங்கைக்கீரை பொரியல்

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

முருங்கைக்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை. நிறைய வைட்டமின்கள் உள்ளது வாரம் இருமுறை சாப்பிட்டால் ரத்த சோகை வராது. எதிர்ப்பு சக்தி வரும் #Mom

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
ஐந்து பேர்
  1. முருங்கைக் கீரை ஒரு கட்டு
  2. துருவிய தேங்காய் ஒரு கப்
  3. வெந்த துவரம்பருப்பு ஒரு கப்
  4. வர மிளகாய் 2
  5. சாம்பார் பொடி கால் டீஸ்பூன்
  6. சின்ன வெங்காயம் 10 பூண்டு 6 பல்
  7. கடுகு உளுத்தம்பருப்பு ஒரு ஸ்பூன் ஆயில் 3 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    முருங்கைக்கீரை பொறுமையாக ஆய்ந்து கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.சின்ன வெங்காயம் 10 பல் பூண்டு 6 பல் உரித்து கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். துவரம்பருப்பு ஒரு கப் வேக வைத்து எடுத்து வைக்கவும்

  2. 2

    வாணலியில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு உளுந்து இரண்டு வர மிளகாய் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் பூண்டு போட்டு வதக்கவும். கீரையை சேர்த்து வதக்கவும்.மஞ்சள்தூள் சிறிதளவு சாம்பார் பொடி,உப்பு சேர்த்து சுருள வதக்கி ஒரு டம்ளர் நீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.கீரை வெந்ததும் துருவிய தேங்காய் ஒரு கப் வெந்த துவரம்பருப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி வைக்கவும். நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

  3. 3

    தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கலாம்.கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.குழந்தை பிறந்த பின்பு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் இந்தக் கீரை சாப்பிட்டால் நன்கு தாய்ப்பால் சுரக்கும் என்று எங்கள் வீட்டில் பெரியவர்கள் சொல்லுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes