எலுமிச்சை ஊறுகாய்

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

#home எலுமிச்சம் பழத்தை 2-3 நாட்கள் கல் உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30-35 நிமிடங்கள்
5பரிமாறுவது
  1. எலுமிச்சம் பழம்- 500 கிராம்
  2. கல் உப்பு தேவையான அளவு
  3. கடுகு தூள் -1தேக்கரண்டி
  4. வெந்தயத்தூள் -1தேக்கரண்டி
  5. பெருங்காயத் தூள் -1தேக்கரண்டி
  6. நல்ல எண்ணெய் -250 கிராம்
  7. மிளகாய் தூள் -5 மேஜைக்கரண்டி
  8. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  9. கருவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30-35 நிமிடங்கள்
  1. 1

    எலுமிச்சம் பழங்களை கழுவி எடுத்துக்கொள்ளவும்.பழங்கள் ஒவ்வொன்றையும் 8 துண்டுகள் போடவும். துண்டுகள் போடும்போதே விதைகளை நீக்கி விடவும். ஒரு பாத்திரத்தில், வெட்டி வைத்துள்ள எலுமிச்சம்பழம் துண்டுகளை சேர்க்கவும். இதனுடன் கல் உப்பு சேர்த்து மூன்று நாட்கள் ஊறவைத்த பிறகு அதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து மீண்டும் ஒரு நாள் ஊற வைக்கவும்.நான்கு நாட்கள் கழித்துப் பார்த்தால் எலுமிச்சம்பழத்தில் உப்பு காரம் நன்றாக கலந்து தோல் மிருதுவாக இருக்கும்.

  2. 2

    சூடான வாணலியில் கடுகு வெந்தயம் சேர்த்து கடுகு வெடிக்கும் வரை பொரித்து, மிக்ஸி ஜாரில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.எடுத்து வைத்திருக்கும் எலுமிச்சையில் கடுகுத்தூள் வெந்தயத்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கி விடவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கருவேப்பிலை சேர்த்து எலுமிச்சை துண்டுகளை சேர்த்து அவற்றில் உள்ள தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.எண்ணெய் பிரிந்து வரும்வரை மிதமான தீயில் வதக்கவும்.

  4. 4

    சூடு ஆறியதும் சுத்தமான பீங்கான் பாட்டிலில் போட்டு வைத்து சரியாக உபயோகித்தால் ரொம்ப நாள் கெட்டுப்போகாமல் இருக்கும் 5நாட்களுக்கு கழித்து உபயோகித்தால் சுவை கூடியிருக்கும்.,

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes