வடு மாங்காய் ஊறுகாய் (vadu mangai pickle)

#home
வடு மாங்காய் ஊறுகாயில் பதப்பொருள் ஏதும் சேர்க்கப்படவில்லை. இதில் ஆமணக்கு எண்ணை சேர்த்து செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணை அதிக பாகுத்தன்மை உள்ளதால் மாங்காயில் உள்ள காற்று மற்றும் ஈரத்தன்மையை பாதுகாக்கிறது. இது மிகவும் பிசுபிசுப்பு தன்மை கொண்டதால் மாங்காயில் நன்றாக உப்பை ஓட்டச்செய்து, தண்ணீரை மிக விரைவில் வெளியில் கொண்டு வருகிறது. இந்த எண்ணை உடம்பில் சூட்டைக்குறைத்து குளிரச்சி கொடுக்கிறது.
சமையல் குறிப்புகள்
- 1
வடுமாங்காயை நன்கு கழுவி, கம்பு நீக்கிவிட்டு, ஈரத்தை கொஞ்சமும் இல்லாமல் துடைத்து, உப்பு, மஞ்சள் தூள் ஆமணக்கு எண்ணை சேர்த்து நன்கு குலுக்கி வைக்கவும். ஒரு வாரம் இதேபோல் காலை, மாலை இரண்டு முறை குலுக்கி வைக்கவும்.
- 2
பின்னர் மாங்காயில் நிறைய தண்ணீர் வரும், அந்த தண்ணீரில் கொஞ்சம் எடுத்து, அத்துடன் கடுகு, வற்றல் மிளகாய் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
- 3
இப்போது அரைத்த விழுதை ஊறவைத்துள்ள மாங்காயில் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். ஒரு வாரம் மேலே சொன்னது போல் குலுக்கி வைக்கவும். மாங்கையின் தோல் நல்ல சுருங்கி வரும், அப்போது உபயோகிக்க எடுக்கலாம். நாட்கள் செல்ல செல்ல மாங்காயின் சுவை அதிகரிக்கும்.
- 4
இந்த ஊற்றுகாயிற்கு எண்ணை ஏதும் சேர்க்கப்படவில்லை. மூன்று டேபிள் ஸ்பூன் ஆமணக்கு எண்ணை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறோம். பொதுவாக ஊற்றுக்காய் என்றாலே, நிறைய எண்ணை ஊற்றுவார்கள். ஆனால் வடுமாங்காய் ஊறுகாய்க்கு மட்டும் எண்ணையே இல்லை. பதப்பொருள் ஏதும் சேர்க்கப்படவில்லை.
- 5
நான் இந்த ஊறுகாய் 2019 ஏப்ரல் மாதத்தில் செய்தது. பிரிட்ஜ்ல் வைக்கத் தேவையில்லை. வெளியில் வைத்துக்கொண்டு உபயோகிக்கலாம்.ஈரமான கை வைத்து ஊறுகாயை தொடாமல் இருந்தால் ஊறுக்காய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
- 6
தயிர் சாதத்துடன், மற்ற எல்லா உணவுடனும் சுவைக்கலாம். ஏப்ரல், மே மாதங்களில் எல்லா இடங்களிலும் வடுமாங்காய் கிடைக்கும். அனைவரும் இதே முறையில் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)


மாங்காய் சாதம் (Mango rice)


வடு மாங்காய் ஊறுகாய்(vadu mangai oorukai recipe in tamil)


* க்விக் மாங்காய் ஊறுகாய் *(mango pickle recipe in tamil)


மாங்காய் ஊறுகாய் (இன்ஸ்டன்ட்)(mangai pickle recipe in tamil)


கோவை குடல் கறி பிரட்டல்


மாங்காய் மல்லி சாதம்


மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)


மணத்தக்காளி வத்தல்


மாங்காய் சாதம்


வெந்தய மாங்காய்


இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய்(tomato pickle recipe in tamil)


எலுமிச்சை ஊறுகாய்


வெண்டைக்காய் மாங்காய் மண்டி


மாங்காய் ஊறுகாய்


கேரட் முள்ளங்கி ஊறுகாய்🥕🥕


மாங்காய் ஊறுகாய்


இனிப்பு புளிப்பு மாங்காய் கேண்டி(mangai candy 🍭)


கல்யாண வீட்டு மாங்காய் ஊர்காய்...(Instant cut mango pickle recipe in tamil)


ரோஹு மீன் ஊறுகாய்


ஒட்டு மாங்காய் ஊறுகாய்


கத்தரிக்காய் காரக் கறி #book #nutrient1


*சேப்பங்கிழங்கு மசியல்*


ஆவக்காய் ஊறுகாய் (Andra style Aavakkaai pickle)


* மாங்காய், தக்காளி, வெங்காய சட்னி*(mango tomato chutney recipe in tamil)


* ஆந்திரா சைடு ஆவக்காய்*(andhra avakkai pickle recipe in tamil)


*மாங்காய் ரசம்*


மாங்காய் வற்றல் (Maankaai vatral recipe in tamil)


கொத்துமல்லி இலை ஊறுகாய்


மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)

கமெண்ட்