அழகர் கோயில் தோசை (Azhakar kovil dosai recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

சுவைத்திருக்கிறேன் மதுரையில் இருந்தபொழுது. மேலே பழமுதிர் சோலை . மலையின் அடிவாரத்தில் அழகிய அழகர் கோயில். புழுங்கல் அரிசி, தோலுரிக்காத கருப்பு உளுந்து, சுக்கு, மிளகு, சீரகம் கறிவேப்பிலை, ஏகப்பட்ட நெய் –தடியான சுவை மிகுந்த தோசை.
வீட்டில் செய்பவர்கள் மிகவும் குறைவு. #india2020

அழகர் கோயில் தோசை (Azhakar kovil dosai recipe in tamil)

சுவைத்திருக்கிறேன் மதுரையில் இருந்தபொழுது. மேலே பழமுதிர் சோலை . மலையின் அடிவாரத்தில் அழகிய அழகர் கோயில். புழுங்கல் அரிசி, தோலுரிக்காத கருப்பு உளுந்து, சுக்கு, மிளகு, சீரகம் கறிவேப்பிலை, ஏகப்பட்ட நெய் –தடியான சுவை மிகுந்த தோசை.
வீட்டில் செய்பவர்கள் மிகவும் குறைவு. #india2020

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  1. 3 கப் புழுங்கல் அரிசி
  2. 1 ¼ கப் தோலுரிக்காத கருப்பு முழு உளுந்து
  3. 1 மேஜைகரண்டி சுக்கு
  4. 1 மேஜைகரண்டி சீரகப்பொடி
  5. 1 தேக்கரண்டி மிளகுப்பொடி
  6. 4 முழு மிளகு
  7. தேவையானஉப்பு
  8. ½ கப் கரிவேப்பிலை
  9. தேவையானநல்லெண்ணை அல்லது நெய்
  10. பிரிவு தோசை

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    1. ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரித்து சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  2. 2

    அரிசி, உளுந்து, ஒன்றாக 10 கப் தண்ணீரில் 4 மணி நேரமாவது உறவைக்க. வடித்து புது நீரோடு சேர்த்து அறைக்க இட்லி கிரைண்டரில் இட்லி மாவு பதத்திர்க்கு அறைக்க. சுக்கு, மிளகு, சீரகம் சேர்க்க. உப்பு சேர்க்க. கையால் நன்றாக கலக்க. மாவு புளிக்க வேண்டும். 4 மணி நேரம் வெய்யிலில் வைக்கலாம்.

    புளித்த மாவில் கரிவேப்பிலைகளை கிள்ளி போட்டு கலந்து
    கொள்ளுக.

  3. 3

    தோசை செய்ய.: மிதமான நெருப்பின் மேல் இரும்பு தோசை கல்லின் மேல் எண்ணை தடவுக. 3 மேஜைகரண்டி நெய் அல்லது எண்ணை ஊற்றுக. அல்லது 2 மேஜைகரண்டி நெய் + 1 மேஜைகரண்டி எண்ணை ஊற்றுக. 3 கப் மாவு ஊற்றி தடியாக தோசை செய்க. தோசை மேல் 1 மேஜைகரண்டி நெய் அல்லது எண்ணை பரவலாக ஊற்றுக. மூடி வேக வைக்க. நெருப்பை குறைக்க. இரண்டு பக்கமும் பிரவுன் ஆக வேண்டும். ஒரு தோசை செய்ய 4-6 நிமிடங்கள் ஆகலாம் உங்கள் அடுப்பை பொறுத்தது.
    தோசை மேல் நெய் தடவி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

கமெண்ட் (9)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Super I like it very much.will try.thank you for sharing this recipie

Similar Recipes