ராகி மாவு தோசை(ragi dosai recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#ds
செய்முறை எளிமை. சுவை அதிகம்.சுவையான,சத்தான ராகி மாவு தோசை..

ராகி மாவு தோசை(ragi dosai recipe in tamil)

#ds
செய்முறை எளிமை. சுவை அதிகம்.சுவையான,சத்தான ராகி மாவு தோசை..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

7பேர்
  1. 1கப் உளுந்து
  2. 4கப் ராகிமாவு
  3. 1ஸ்பூன் வெந்தயம்
  4. தேவையானஅளவு உப்பு
  5. தேவையான அளவுதோசை வார்க்க எண்ணெய்/நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    1: 4விகிதம்.1கப் உளுந்து, 4கப் ராகி மாவு.

  2. 2

    உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

  3. 3

    ஊறிய உளுந்து மற்றும் வெந்தயத்தை மிக்ஸி ஜாருக்கு மாற்றி தண்ணீர் தெளித்து சேர்த்து மையாக அரைக்கவும். வெண்ணெய் போல் திரண்டு வரும் போது எடுக்கவும்.

  4. 4

    பாத்திரத்தில் ராகி மாவு மற்றும் அரைத்த உளுந்து மாவு அதனுடன் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கைகளால் நன்றாக கலந்து,குறைந்தது 7 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  5. 5

    புளித்ததும், தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து, அடுப்பில் தோசை கல் வைத்து,கல் சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊற்றி விரித்து நெய் அல்லது எண்ணெய் சேர்த்து இரு புறமும் வேக விடவும்.

  6. 6

    எண்ணெய் சேர்த்தாலே ஓரங்கள் நன்றாக மொறுமொறுப்பு கிடைக்கும். இது அரசி மாவு தோசை போலல்லாமல்,தோசை வார்க்க எளிமையாகவும் நன்றாக மொறுமொறுப்பாகவும் கிடைக்கும்.

  7. 7

    அவ்வளவுதான். சுவையான ராகி தோசை ரெடி.
    இதற்கு தேங்காய் சட்னி முதல் எல்லா வகையான சட்னிகளும் பொருத்தமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes