எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 2 கப் இட்லி அரிசி
  2. 1/2 கப் தேங்காய் துருவல்
  3. உப்பு
  4. தாளிக்க
  5. 1நறுக்கிய வெங்காயம்
  6. 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  7. 2 பச்சை மிளகாய்
  8. கடுகு
  9. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸி ஜாரில் முதலில் தேங்காய் துருவலை சேர்க்கவும் பிறகு இதில் ஊறவைத்து இட்லி அரிசியை வடிகட்டி இதனுடன் உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு கறிவேப்பிலை கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும்... பிறகு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு அரைத்து வைத்த மாவை இதனுடன் சேர்த்து கைவிடாமல் கிளறவும்

  3. 3

    மாவு கெட்டியாகி சுருண்டு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்

  4. 4

    பிறகு சிறிது மாவை எடுத்து உள்ளங்கையால் அழுத்தி பிடிக்கவும் இட்லி பானையில் தண்ணீர் விட்டு பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் வைத்து மூடி போட்டு 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்

  5. 5

    கொழுக்கட்டை வெந்தவுடன் இதை தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னியுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes