மதுரை மட்டன் குழம்பு (Spicy Mutton Gravy) (Madurai mutton kulambu recipe in tamil)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

சுண்டி இழுக்கும் மணமும் நிறமும் சுவையும் கொண்ட மட்டன் குழம்பு..

மதுரை மட்டன் குழம்பு (Spicy Mutton Gravy) (Madurai mutton kulambu recipe in tamil)

சுண்டி இழுக்கும் மணமும் நிறமும் சுவையும் கொண்ட மட்டன் குழம்பு..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 to 6 பேர்
  1. 700 கிராம்,மட்டன்
  2. 5டேபிள் ஸ்பூன்நல்லெண்ணெய்
  3. 15சின்ன வெங்காயம்
  4. 2டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  5. 3.5டேபிள் ஸ்பூன்மிளகாய்த்தூள்
  6. 3டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  7. 1.5டேபிள் ஸ்பூன்மஞ்ச சீரகத் தூள்
  8. 2டேபிள் ஸ்பூன்சோம்புத்தூள்
  9. தேவையானஅளவு கல்லுப்பு,
  10. அரிசி ஊறவைத்த நீர்
  11. தாளிக்க:
  12. 1/4ஸ்பூன்சோம்பு
  13. 5வெந்தயம்
  14. 2பட்டை துண்டுகள்,
  15. 1 பிரிஞ்சி இலை
  16. 2கல்பாசி பூ

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் 700 கிராம் மட்டனை சுத்தம் செய்து தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

  2. 2

    பிறகு கழுவி வைத்த மட்டனில், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்ச சீரகத்தூள், சோம்புத்தூள், மற்றும் கல்லுப்பு கலந்து நன்றாக பிரட்டி வைத்துக் கொள்ளலாம்.

  3. 3

    அடுப்பில் குக்கரை வைத்து தேவையான அளவு நல்லெண்ணெய் காயவைத்து தாளிக்க எடுத்துவைத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.

  4. 4

    நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். மசாலாவுடன் பிரட்டி வைத்த மட்டனையும் அதனுடன் சேர்த்து நன்றாக சுருள வதக்கவும்.

  5. 5

    15 நிமிடங்களுக்கு எண்ணெய் பிரிந்து வரும்வரை நன்றாக வதக்கவும்.

  6. 6

    பிறகு அரிசியை சுத்தம் செய்து விட்டு சாதம் வடிப்பதற்காக ஊறவைத்த நீரை மட்டும், எடுத்து குழம்பில் சேர்க்கவும். இது சுவையை அதிகரிக்கும்.

  7. 7

    பின்பு குக்கரை மூடி போட்டு, 7 விசில் வரை வேகவிடவும்.

  8. 8

    விசில் அடங்கிய பின் குக்கரில் சுவையான மட்டன் குழம்பு தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

கமெண்ட் (6)

Similar Recipes