சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயை ஸ்டவ்வில் வைத்து தண்ணீர், வெல்லம் சேர்த்து சூடாக்கவும். வெல்லம் உருகியதும், தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து, தண்ணீர் வற்றியதும் இறக்கவும். மொத்தம் மூன்று நிமிடங்கள் ஆகும். நிறைய நேரம் விட்டால் பூரண கல் போல் ஆகிவிடும். இப்போது மோதகத்தின் உள் வைக்கும் ஸ்டபிங் தயாராகிவிட்டது.
- 2
தேங்காய் துருவல், வெல்லம் கலந்த பூரணம் சூடு ஆறியவுடன் உங்களுக்கு விருப்பப்படி உருட்டி தயாராக வைக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க ஆரம்பித்தவுடன், ஒரு டீஸ்பூன் நெய், அரை கப் அரிசி மாவு சேர்த்து, ஒரு நிமிடம் கலந்தால் மாவு கெட்டி ஆகிவிடும். மாவு சேர்த்து பந்து போல் ஆனதும் இறக்கி வைக்கவும்.
- 4
மாவு சூடாறியவுடன் நன்கு பிசைந்து மாவை ஓரளவு தடிமனாக கையில் வைத்து அழுத்தி, தயாராக வைத்துள்ள பூரணத்தை உள்ளே வைத்து உருவம் கொடுக்கவும். மோதகம் செய்யும் மோல்டு இருந்தால் அதில் வைத்து உருவம் கொடுக்கவும்.
- 5
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்கும் போது ஆவியில் வைக்கும் தட்டில், எண்ணை தேய்த்து, அதில் மோதகங்களை வைத்து ஏழு நிமிடங்கள் வேகவைத்து இறக்கினால் சுவையான இனிப்பு மோதகம் சுவைக்கத்தயார்.
- 6
பின்னர் அரிசி மாவில் செய்த இரண்டு வித இனிப்பு மோதகத்தை ஒரு தட்டுகளில் பரிமாறும் மாற்றினால் சுவையான மோதகம் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் இனிப்பு மோதகம் (carrot sweet modak) (Carrot inippu mothakam recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. எனவே அந்த கேரட்டை வைத்து ஒரு புது வித மோதகம் செய்ய நினைத்தேன். செய்து பார்த்தால் நல்ல சுவையும், கலரும் வந்தது. அனைவரும் செய்து ருசித்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam Renukabala -
-
கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam Renukabala -
-
பீட்ரூட் இனிப்பு உருண்டை (Beetroot sweet balls)
பீட்ரூட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதை வைத்து ஒரு இனிப்பு மினி கொழுக்கட்டை மாதிரி உருட்டி, கொஞ்சம் டிசைன் கொடுத்து முயற்சித்தேன். மிகவும் அழகாகவும், நல்ல நிறத்தில் மிகவும் சுவையாகவும் இருந்தது. அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam Renukabala -
பதாம் முந்திரி பூரணகொழுக்கட்டை (Badam munthiri poorana kolukattai recipe in tamil)
#steam Vijayalakshmi Velayutham -
-
-
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
-
-
-
-
-
உக்காளி /Ukkali
#GA4 #week 15உக்காளி எங்கள் வீட்டில் விசேஷங்களில் செய்யும் இனிப்பாகும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த இனிப்புகளில் இதுவும் ஒன்று. இதை நாம் விரைவில் செய்து விடலாம் மிகவும் ஆரோக்கியமான இனிப்பாகும். Gayathri Vijay Anand -
-
-
எள்ளு பூரணம் கொழுக்கட்டை (Ellu pooranam kolukattai recipe in tamil)
#steamபூரண வகைகளில் இது ஒரு பூரணம். பழைய காலத்திலிருந்து செய்துவரும் பூரணம். எள்ளு புரோட்டின் சத்தும் வெள்ளம் இரும்பு சத்து கொண்டது. Meena Ramesh -
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar
More Recipes
கமெண்ட் (2)