வாழைப்பழ மினி கேக்(Steamed Banana Chocholate Mini Cake recipe in tamil)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#steam
#ilovecooking
நீராவி முறையில் செய்த கோதுமை மாவு, செவ்வாழைப் பழம் சேர்ந்த கேக்..

வாழைப்பழ மினி கேக்(Steamed Banana Chocholate Mini Cake recipe in tamil)

#steam
#ilovecooking
நீராவி முறையில் செய்த கோதுமை மாவு, செவ்வாழைப் பழம் சேர்ந்த கேக்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  1. 1செவ்வாழை பழம்
  2. 1முட்டை
  3. ஒரு கப்,கோதுமை மாவு
  4. அரை கப்வெண்ணெய்
  5. அரை ஸ்பூன்பேகிங் சோடா
  6. முக்கால் கப்,நாட்டுச் சர்க்கரை
  7. சாக்லேட் துண்டுகள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    செவ்வாழை பழத்தை தோல் உரித்து நன்றாக போர்க் ஸ்பூன் வைத்து மசித்துக் கொள்ளவும்.

  2. 2

    அதில் ஒரு முட்டையை சேர்த்து நன்றாக அடித்துக் கலக்கவும்.

  3. 3

    பிறகு அந்த கலவையில் கோதுமைமாவு நாட்டுச்சக்கரை சோடா உப்பு வெண்ணெய் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும்.

  4. 4

    கேக் வேக வைப்பதற்கான சிறிய கிண்ணங்களில் வெண்ணை தடவி கோதுமை மாவு போட்டு கிரீஸ் செய்து வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    கலந்து வைத்த மாவை கிண்ணங்களில் ஊற்றி நடுவே சாக்லேட் துண்டுகள் வைத்து மேலும் மாவு ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைக்கவும்.

  6. 6

    கிண்ணங்களில் சிறிய மூடி வைத்து இட்லி பாத்திரத்தை மூடி நீராவியில் வேக விடவும்.

  7. 7

    30 நிமிடங்கள் வேகவிட்டு போர்க் ஸ்பூன் கொண்டு குத்தி பார்த்து, கேக்கை திருப்பி போட்டு எடுக்கவும்.

  8. 8

    சுவையான வாழைப்பழ சாக்லேட் கேக் ரெடி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes