எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1/4 கப் மைதா
  2. 1/4 கப்அரிசி மாவு
  3. 1/4 கப்வறுத்த ரவை
  4. 1/4 கப்தேங்காய் துருவல்
  5. 1/4 ஸ்பூன் மிளகு தூள்
  6. 1 சிட்டிகை சோடா உப்பு
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ரவையை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும் பின் தேங்காய் துருவல் ஐ வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும் பின் இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி பொடிக்கவும்

  2. 2

    பின் இதனுடன் மைதா அரிசி மாவு உப்பு மிளகுத்தூள் சேர்த்து சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பிசைந்து கொள்ளவும்

  3. 3

    பின் சூடான எண்ணெய் 1 குழி கரண்டி எடுத்து ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும் பின் ஈரத்துணி கொண்டு அரை மணி நேரம் வரை வைக்கவும்

  4. 4

    பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி நீளவாக்கில் உருட்டி இரண்டு முனையையும் ஒன்றாக சேர்த்து அழுத்தி விடவும்

  5. 5

    பின் சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes