தேங்காய்ப்பால் முறுக்கு (Thenkaaipaal murukku recipe in tamil)

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#deepawali
#kids 2
தீபாவளி என்றாலே முதலில் முறுக்கு தான் ஞாபகத்திற்கு வரும் அதையே தேங்காய்ப்பால் விட்டு மாவு பிசைந்து முறுக்கு செய்தால் ருசி சற்று அதிகமாக இருக்கும். அதனால் தேங்காய்பால் முறுக்கு ரெசிபியை பகிர்கின்றேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 நபருக்கு
  1. 1கப் கழுவி காயவைத்து அரைத்த அரிசி மாவு
  2. 2ஸ்பூன் வறுத்த அரைத்த உளுந்த மாவு
  3. 2ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு
  4. 1/2ஸ்பூன் எள்
  5. 1/2கப் தேங்காய் பால்
  6. தேவையான அளவு உப்பு
  7. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    இப்பொழுது அரைத்த மாவு வகைகள் உப்பு எள்ளு ஆகியவற்றை நன்றாக கலக்கவும்

  2. 2

    அத்துடன் சிறிது சிறிதாக தேங்காய்பால் விட்டு பாதி மாவை முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். இப்பொழுது முறுக்கு உழக்கில் போட்டு பாலித்தீன் கவரில் பிழிந்து வைக்கவும்

  3. 3

    ஒரு கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் முறுக்கை பொரித்து எடுக்கவும். சுவையான தேங்காய்ப்பால் முறுக்கு ரெடி. வாயில் போட்டதும் கரகரப்பாகவும் சற்று இனிப்பு சுவையுடனும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes