தஹி பராத்தா (dahi paratha)/curd

#goldenapron3 #book #lockdown2
மதிய உணவிற்கு சமைக்க காய் கறிகள் இல்லை. தீர்ந்து விட்டது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் நினைத்த நேரத்தில் வெளியே செல்ல முடியாது.அதனால் வீட்டில் இருந்த கோதுமை மாவை வைத்து ஒரு கப் தயிர் பயன்படுத்தி இந்த தயிர் பராத்தா செய்தேன். மிகவும் மிருதுவாக இருந்தது.கூட மசாலா பொருட்கள் சேர்த்து செய்தேன். மணமும் சுவையும் அருமையாக இருந்தது.
தஹி பராத்தா (dahi paratha)/curd
#goldenapron3 #book #lockdown2
மதிய உணவிற்கு சமைக்க காய் கறிகள் இல்லை. தீர்ந்து விட்டது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் நினைத்த நேரத்தில் வெளியே செல்ல முடியாது.அதனால் வீட்டில் இருந்த கோதுமை மாவை வைத்து ஒரு கப் தயிர் பயன்படுத்தி இந்த தயிர் பராத்தா செய்தேன். மிகவும் மிருதுவாக இருந்தது.கூட மசாலா பொருட்கள் சேர்த்து செய்தேன். மணமும் சுவையும் அருமையாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும். 2 கப் கோதுமை மாவில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள்,அரை ஸ்பூன் வரமிளகாய்த்தூள், கால் ஸ்பூன் சீரகத்தூள், அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள்,அரை ஸ்பூன் ஓமம், ஒரு ஸ்பூன் கஸ்தூரி மெத்தி, ஒரு ஸ்பூன் இஞ்சி பேஸ்ட், உப்பு தேவையான அளவு,ரெண்டு ஸ்பூன் கொத்தமல்லி தழை ஆயில் 2 ஸ்பூன் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். பொதினா தழை இருந்தால் ஒரு ஸ்பூன் கூட சேர்த்து கொள்ளலாம் சுவை நன்றாக இருக்கும்
- 2
நன்கு கலந்த மாவில் ஒரு கப் தயிரை சேர்த்து 5 நிமிடம் வரை நன்கு பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தயிரோ அல்லது தண்ணீரோ கொஞ்சம் சேர்த்துக் கொள்ளவும். பிசைந்த மாவின் மேல் ஒரு ஸ்பூன் எண்ணை தடவி 20 நிமிடம் மூடி வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து மாவுகளை தேவையான அளவில் உருட்டி வைத்துக் கொள்ளவும்
- 3
உருண்டை ஒன்றை எடுத்து சப்பாத்தி தேய்க்கும் பலகையில் வைத்து முதலில் வட்டவடிவில் நகர்த்தி கொள்ளவும். அதன்மேல் கொஞ்சம் எண்ணெய் தடவி மீண்டும் அதன் மேல் கொஞ்சம் கோதுமை மாவை பரவலாக தூவி விடவும் பிறகு அதை இரண்டாக மடிக்கவும். மடித்த மாவில் மீண்டும் எண்ணெய் பரவலாக தடவி மீண்டும் அதன் மேல் கொஞ்சம் கோதுமை மாவை தூவி விடவும் அதை மீண்டும் மடிக்கவும். இப்பொழுது முக்கோண வடிவத்தில் மடித்த சப்பாத்தி மாவு இருக்கும். அதை பூரி நகர்த்தும் கட்டை கொண்டு முக்கோண வடிவில் நகர்த்தி கொள்ளவும்.
- 4
முக்கோண வடிவில் நகர்த்திய சப்பாத்தி மாவு போல், எல்லா உருண்டைகளையும் நகர்த்தி, சுடுவதற்கு தயார்படுத்தி வைத்துக் கொள்ளவும்.
- 5
அடுப்பைப் பற்றவைத்து, அதில் தோசைக்கல்லை சூடேற்றி, ஒரு ஸ்பூன் எண்ணெய் எடுத்து தோசைக்கல்லில் பரவலாக விடவும். பிறகு நகர்த்திய சப்பாத்தியை தோசைக்கல்லில் போடவும் இருபுறமும் சிறிது சூடு பண்ணி மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணெய் பரவலாக விடவும்.
- 6
இரு புறமும் திருப்பி போட்டு தீய விடாமல் சப்பாத்திகள் அனைத்தையும் சுட்டு எடுக்கவும். விருப்பப்பட்டால் நெய் அல்லது வெண்ணை தடவியும் சுட்டு எடுக்கலாம்.தயிர் பயன்படுத்தி செய்வதால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும். லேயர்ட் பராத்தா ரெடி. தொட்டு கொள்ள ரைத்தா வகைகள் மற்றும் தால் பிரை குருமா வகைகள் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டிக்கர் பராத்தா(Tikker Paratha Recipe in Tamil)
#cookwithfriends#santhichowdry#maincourse#cooksnap என் தோழி சாந்தி வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் எனக்காக டிக்கர் பராத்தா செய்து கொடுத்தார்கள் மிகவும் சுவையாக வித்தியாசமான ரெசிபி யாகவும் இருந்தது. வெகு நாட்களாக நான் இதை செய்ய முயற்சி செய்தேன்.நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த ரெசிபியை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். Dhivya Malai -
-
தஹி சேமியா(தயிர் சேமியா)🍚
#nutrient1 # bookதயிர் பால் சம்பந்தப்பட்ட உணவு ஆகும். 100 கிராம் தயிரில் 11 கிராம் புரோட்டீன் உள்ளது. புரொடின் செரிந்துள்ளது மட்டுமல்லாமல் கால்சியம் சத்து ( 100gm/8./.) தயிரில் அதிகம் உள்ளது. விட்டமின் A அதிகம் உள்ளது. சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், கோபாலமின், மெக்னீசியம் போன்ற இதர தாதுக்களும் இதில் உள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்பு 17 கிராமம் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு 8 கிராமம் உள்ளது. நல்ல கிருமி களை உருவாக்கி ஜீரண சக்திக்கு சிறப்பான உணவாக இருக்கிறது. பகலில் உணவில் தயிரை சேர்த்து கொள்வதை விட இரவில் சர்க்கரை சேர்த்தோ அல்லது கருப்பு மிளகு சேர்த்து சாப்பிடுவது ஜீரண மண்டலத்தை சாந்தப்படுத்தும்.பாலில் உள்ள புரதச்சத்தை விட தயிரில் புரதச் சத்து அதிகம் உள்ளது. Yogurt அல்லது தயிர் ஒரு சிறந்த probiotic ஆக செயல்படுகிறது. உடலில் நல்ல கிருமிகள் உருவாக காரணமாகிறது. இந்த நல்ல மற்றும் பயனுள்ளகிருமிகள் நம் அன்றாட செயல் திறனை ஊக்குவிக்கிறது. ஜீரண உறுப்புகளை இலகுவாக்கி மல பிரச்சினைகளை போக்குகிறது. வயிற்றுப்போக்கு சமயத்தில் மோர் தயிர் எடுத்துக் கொள்வது உடலுக்கு இழந்த நீர் சக்தியை சக்தியை மீட்டுக் கொடுத்து உடல் சோர்வை நீக்குகிறது.நாம் தினமும் நம் உணவில் கட்டாயம் தயிரினை சேர்த்துக்கொள்ளவேண்டும் குழந்தைகளுக்கும் தயிர் கொடுத்து சிறப்பான உணவு பழக்கத்தை உருவாக்கித் தர வேண்டும் . இந்த தயிர் சேமியாவில் முந்திரிபருப்பு, உலர் திராட்சை மாதுளை பழம் சேர்த்து செய்து இருப்பதால் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது. Meena Ramesh -
தக்காளி தயிர் பச்சடி(tomoto curd raitha)
#golden apron3 #lockdown 2 #bookவீட்டில் தக்காளி மற்றும் தயிர் இருந்தது.ஒரு மாறுதலுககாக இதை செய்யவில்லை. முருங்கைக்காய் ஒன்றும், இரண்டு கத்தரிக்காய் மட்டுமே இருந்தது. பொரியல் செய்ய வேறு காய்கறிகள் இல்லை. லாக் டவுன் நேரத்தில் வெளியே செல்ல விரும்பவில்லை. அதனால் தொட்டு கொள்ள இதை செய்தேன்.ஒரே கல்லில் மூன்று மாங்காய்.(tomoto,curd,and raitha/golden apron 3) Meena Ramesh -
-
பீன்ஸ் சப்ஜி
#goldenapron3 #lockdown #bookஇந்த லாக் டவுன் நேரத்தில் பீன்ஸ் காய் கிடைத்தது. .அதை வைத்து இந்த புதுமையான சப்ஜி செய்தேன். இது போன்ற எமர்ஜென்சி காலத்தில் என்ன கிடைப்பதோ அதை வைத்து புதுமையாக செய்யலாம் .இதுவே பெண்களின் திறமை. Meena Ramesh -
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
ஆலு பரோட்டா (aloo paratha).
#cookwithfriends#priyangayogesh#maindish சப்பாத்தி பிரியர்களுக்கு இது மிகவும் ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியான சப்பாத்தி செய்பவர்களுக்கு இது ஒரு புது விதமாக இருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்றது இதனுடன் தயிர் வெங்காயம் அல்லது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கிரேவிசேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
தஹி பனீர் பிரெட் சாண்ட்விச்🥪 (Dahi paneer bread sandwich recipe in tamil)
#cookwithmilkதஹி பனீர் பிரட் சாண்ட்விச். என் புதிய முயற்சி. ஆனாலும் சுவையாகத்தான் இருந்தது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். Meena Ramesh -
மீல் மேக்கர் கோதுமை பராத்தா(Meal maker wheat paratha recipe in tamil)
சப்பாத்தி மாவில் மீல் மேக்கர் ஸ்டப்பிங் வைத்து செய்த பராத்தா இதற்கு சைடிஷ் எதுவும் தேவை இல்லை குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பயணத்தின் போது எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்#flour Senthamarai Balasubramaniam -
மோர் குழம்பு
#lockdown 2 #bookஇந்த ஊரடங்கு நேரத்தில் இன்று என்ன செய்ய என்று யோசித்த போது மோர் நிறைய இருந்த காரணத்தினால் மோர் குழம்பு செய்வது என முடிவு செய்தேன். வெண் பூசணி போட்டு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை. அதனால் வெறும் மோர் குழம்பு மட்டும் செய்தேன். உருளைக்கிழங்கு இருந்தது. அதை தொட்டு கொள்ள செய்தேன். Meena Ramesh -
அவல் பராத்தா (poha paratha in tamil)
#cf6 இந்த பராத்தா மிகவும் மிருதுவாக இருக்கும்... நீங்களும் செய்து பாருங்க.. Muniswari G -
-
-
மிக்ஸ தால் பிரை
#lockdown2 #bookஊரடங்கு சட்டம் முடியும் வரை நாம் காய்கறிகள் சரியாக கிடைக்கவில்லை என்று வருந்தவே தேவை இல்லை. வீட்டில் உள்ள மளிகை சாமான்களை வைத்து எவ்வளவோ உணவு வகைகளை செய்ய முடியும். அப்படி செய்தது தான் இந்த சத்து மிகுந்த மிக்ஸ தால் பிரை. எல்லா பருப்பு வகைகளையும் சேர்த்து செய்த ஆரோக்யம் மிகுந்த சுவையான பருப்பு கூட்டு கலவை ஆமும். Meena Ramesh -
Methi Chappathi/வெந்தயக்கீரை சப்பாத்தி (Venthayakeerai chappathi recipe in tamil)
#photo#kerala Shyamala Senthil -
-
வெஜ் தேப்லா(Vegetarian Thepla Recipe in Tamil)
#goldenapron2குஜராத்தி உணவில் அதிக அளவு கடலை மாவு தயிர் ஓமம் சேர்க்கின்றனர் நல்ல ஒரு இணை தயிர் குளிர்ச்சி ஓமம் செரிமானம் அவங்க ஊர் காலநிலைக்கு தகுந்த உணவு இந்த உணவும் நம் ஊருக்கும் ஏதுவாக இருக்கும் Chitra Kumar -
-
-
-
🍌 வாழைப்பழம் பராத்தா(Banana paratha)🍌
மிருதுவான சுவையான சத்தான. குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு. என் மகளுக்காக நான் இதை செய்தேன். #GA4 Rajarajeswari Kaarthi -
தயிர் வெந்தயக்கீரை பூரி (Dahi Methi leaves Poori recipe in tamil)
#Grand2 தயிர் வெந்தயக்கீரை பூரி எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது.😍😍 Shyamala Senthil -
-
மலாய் கோஃதா கறி /Malai Kofta Curry
#book#Goldenapron3#lockdown2லாக்டவுன் சமயத்தில் வெளியே ஹோட்டலுக்குச் செல்ல முடியாது.ஆகவே தந்தூரி உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிட்டோம் .சுவையாக இருந்தது .😋😋 Shyamala Senthil -
கேரட் முள்ளங்கி ஊறுகாய்🥕🥕
#கேரட்#bookஇந்த ஊறுகாய் செய்முறை மிகவும் எளிதானது. சுவையானதும் கூட. கேரட் மற்றும் முள்ளங்கி கொண்டு செய்த ஊறுகாய் ஆகும். சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். எப்போதும் போல் மாங்காய் எலுமிச்சங்காய் போன்றவற்றின் ஊறுகாய் செய்வதற்கு இது போன்ற காய்கறிகளிலும் ஊறுகாய் முயற்சி செய்து பார்க்கலாம்.😋🌶️🍛 Meena Ramesh -
-
நெய் கோழி வருவல்(Ghee chicken roast recipe in Tamil)
#goldenapron3.#அன்பானவர்களுக்கான சமையல்.கோல்டன் ஏப்ரல் 3 நெய் பூண்டு பயன்படுத்தி ஒரு கோழி வறுவல் செய்துள்ளேன். கோழி வருவல் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகவும் பிடித்தமானது என்பதால் எனது அன்பானவர்களுக்கான இந்த கோழி வறுவலை பகிர்கிறேன் Aalayamani B -
பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் . Shyamala Senthil -
ஓம பிஸ்கட் #book
தடை உத்தரவால் ஸ்னாக்ஸ் வாங்க செல்ல முடியவில்லை, அதனால் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து பிஸ்கெட் செய்தேன். குழந்தைகள் மகிழ்ந்தனர். Hema Sengottuvelu
More Recipes
கமெண்ட்