டபுள் கா மேத்தா (ஹைதெராபாத் மெயின் டெஸெர்ட்) (Double ka metha recipe in tamil)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#ap

ஹைதெராபாத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் உள்ள பிரசித்தி பெற்ற டிசர்ட் டபுள் கா மேத்தா. மேத்தா என்றால் இனிப்பு. டபுள் கா மேத்தா என்றால் இரட்டிப்பு இனிப்பு என்று பொருள்.

இதில் இன்னும் இனிப்பு சுவையை அதிகரிக்க மில்க் மெய்ட், புல் கிரீம், கோவா ஆகியவற்றை சேர்க்கலாம்.

அதிக கலர் வேண்டுமெனில் சர்க்கரை பாகில் கலர் பவுடர் சேர்க்கலாம்.

பிரெட்டை வெட்டி அதை காற்றில் உலர விட்டு பின் பொரித்தால் எண்ணெய் அதிகம் குடிக்காது. பிரெட்டை அதிக கனமாக வெட்டவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. ஸ்வீட் ப்ரெட்
  2. 1/4கிலோ சர்க்கரை
  3. 1/2லிட்டர் புல் கிரீம் மில்க்
  4. குங்கும பூ சிறிது அல்லது புட் கலர்
  5. நட்ஸ்
  6. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    புல் கிரீம் மில்க்கை நன்கு திக்காகும் வரை சுண்ட காய்ச்சி எடுத்து கொள்ளவும். பிரெட்டை சதுரமாக வெட்டி கொண்டு அதை எண்ணெயில் கோல்டன் கலரில் பொறித்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    சர்க்கரையை தண்ணீர் சேர்த்து காய்ச்சவும். சர்க்கரை கரைந்தால் போதும். பாகுபதம் தேவையில்லை. சர்க்கரை கரைந்த உடன் பொரித்த பிரெட்டை சர்க்கரை பாகில் சேர்க்கவும். அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து கலந்து பிரெட், பால் மற்றும் சர்க்கரை பாகை உறிஞ்சிய உடன் அடுப்பை அனைத்து அதன் மேல் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற பருப்பு வகையை தூவி பரிமாறவும்.

  3. 3

    சுவையான ஹைதெராபாத் டிஸ்ஸர்ட் டபுள் கா மேத்தா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manjula Sivakumar
அன்று

Similar Recipes