ஆலு பராத்தா

Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
கும்பகோணம்

#GA4
இன்று ஆலு பராத்தா எப்படி செய்வது னு பார்க்கலாம். இதற்கு தனியா சைட் டிஷ் தேவை இல்லை.. செய்முறை விளக்கத்தை தெரிஞ்சிக்கலாமா...

ஆலு பராத்தா

#GA4
இன்று ஆலு பராத்தா எப்படி செய்வது னு பார்க்கலாம். இதற்கு தனியா சைட் டிஷ் தேவை இல்லை.. செய்முறை விளக்கத்தை தெரிஞ்சிக்கலாமா...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பேர்
  1. கோதுமை மாவு 1 கப்
  2. நெய் 1 ஸ்பூன்
  3. 2உருளைக்கிழங்கு
  4. கரம் மசாலா 1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/2 சிட்டிகை
  6. மல்லி தூள் 1/2 சிட்டிகை
  7. காரப்பொடி 1/2 சிட்டிகை
  8. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    1 கப் கோதுமை மாவில் 1/2 சிட்டிகை உப்பு, நெய் 1 ஸ்பூன் சேர்த்து சிறிது நீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு மிருதுவாக இருக்கும் படி பிசைந்து 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.

  3. 3

    உருளைக்கிழங்கை வேகவைத்து பின் தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

  4. 4

    மஞ்சள் தூள், காரப்பொடி, உப்பு, மல்லித்தூள், கரம் மசாலா மேற்குறிப்பிட்ட அளவுகளில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

  5. 5

    தண்ணீர் சேர்க்காமல் பிசைந்து கொள்ளவும்.

  6. 6

    மசாலா இப்போது தயாராக உள்ளது. மாவும் தயார் நிலையில் உள்ளது.

  7. 7

    மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அப்பளம் போடுவது போல போட்டு அதனுள் தயார் நிலையில் உள்ள மசாலா வை வைத்து கொள்ளவும்.

  8. 8

    கொழுக்கட்டை போல மீண்டும் உருட்டி அப்பளம் போல மீண்டும் போட்டு தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்.

  9. 9

    சுவையான ஆரோக்கியமான ஆலு பராத்தா இப்போது தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
அன்று
கும்பகோணம்
இல்லத்தை மேன்மையுமற செய்பவர்SS Saiva Virunthu யூடியூப் சேனல்மேலும் பலவகை சத்தான சுவையான பாரம்பரிய உணவு வகைகளை பார்த்து ரசிக்க பின் ருசிக்க மறக்காம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க...
மேலும் படிக்க

Similar Recipes