சுண்டைக்காய் புளிப் பச்சடி (Turkey Berry Tamarind Gravy) (Sundaikkai puli pachadi recipe in tamil)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#GA4
#ga4 #week1
Tamarind
காரசாரமான புளிப் பச்சடி, செட்டி நாட்டு சமையல் வகை. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

சுண்டைக்காய் புளிப் பச்சடி (Turkey Berry Tamarind Gravy) (Sundaikkai puli pachadi recipe in tamil)

#GA4
#ga4 #week1
Tamarind
காரசாரமான புளிப் பச்சடி, செட்டி நாட்டு சமையல் வகை. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 250 கிராம் சுண்டைக்காய்
  2. புளி சிறிதளவு,
  3. 7சின்ன வெங்காயம்
  4. கறிவேப்பிலை,
  5. 1பச்சை ‌மிளகாய்
  6. 1தக்காளி
  7. 3/4 டேபிள் ஸ்பூன்,மிளகாய்த்தூள்
  8. 1/2 டேபிள் ஸ்பூன்,மல்லித்தூள்
  9. 1/4 டேபிள் ஸ்பூன்,மஞ்சசீரகத்தூள்
  10. தேவையானஅளவு கல்உப்பு,
  11. வேகவைத்த பருப்பு சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சுண்டைக்காயை நறுக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி நீர் வற்றும் வரை வேக வைக்கவும்.

  2. 2

    வெந்த சுண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். புளியை கரைத்து வைக்கவும்.

  3. 3

    வேகவைத்த சுண்டைக்காயுடன் புளி கரைசல், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சசீரகத்தூள், கல்உப்பு, சேர்த்து வைக்கவும்.

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை ‌மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  5. 5

    கலந்து வைத்த சுண்டைக்காய் மற்றும் மசாலா கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.

  6. 6

    நன்றாக சேர்ந்து வந்தவுடன் பருப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.

  7. 7

    சுவையான சுண்டைக்காய் புளி பச்சடி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes