கோபி பரோட்டா #the.Chennai.foodie

Hema Ezhil
Hema Ezhil @cook_26380385

கோபி பரோட்டா, வெண்டைக்காய் ராய்தா, கேரட் சாலட் 😍😍😍😍😍 #the.Chennai.foodie

கோபி பரோட்டா #the.Chennai.foodie

கோபி பரோட்டா, வெண்டைக்காய் ராய்தா, கேரட் சாலட் 😍😍😍😍😍 #the.Chennai.foodie

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 minutes
2 பரிமாறுவது
  1. கோதுமை மாவு – 2 கப் ஆட்டா உப்பு – ½ தேக்கரண்டி தண்ணீர் – மிருதுவான மாவு பிசைய தேவையான அளவு எண்ணெய் – பரோட்டா செய்ய
  2. பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் – 4 கப் இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி ஓமம் – 1/4 தேக்கரண்டி சீரகம் – 1/4 தேக்கரண்டி கொத்தமல்லி இலை – 1/4 கப் பொடியாக நறுக்கியது
  3. பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி விரும்பினால் கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி உலர் மாங்காய் தூள் – ½ தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

20 minutes
  1. 1

    மாவில் உப்பு சேர்க்கவும்.
    தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக மாவில் சேர்த்து பிசையவும்.
    மாவு மிருதுவாக சிறிது எண்ணெய் சேர்த்து பிசையவும்.
    காலிஃப்ளவர் சமைக்கும் வரை, பிசைந்த மாவை ஒரு மெல்லிய துணியால் மூடி வைக்கவும். சிறிது நேரம் மாவு ஊறினால் பரோட்டா மிருதுவாக வரும்.

  2. 2

    காலிஃப்ளவரை மிக பொடியாக துருவிக் கொள்ள வேண்டும்.
    வாணலில் எண்ணெய் 1 தேக்கரண்டி ஊற்றி, சீரகம், ஓமம் சேர்த்து தாளிக்கவும்.
    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசம் போகும் வரை வதக்கி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.
    துருவிய காலிஃப்ளவர், தேவையான அளவு உப்பு, கரம் மசாலா தூள்,மாங்காய் தூள் சேர்க்கவும்.
    நன்றாக வதக்கி, மெல்லிய தனலில் அடுப்பை குறைத்து 2 நிமிடங்கள் விடவும். தண்ணீர் வற்றி மசாலா காலிஃப்ளவரில் இறங்க இந்த நேரம் போதுமானது ஆகும்.
    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்

  3. 3

    பிசைந்த மாவை எலுமிச்சை அளவில் உருட்டவும். சப்பாத்தி 3-4 அங்குலம் வருமளவு வட்டமாக தேய்க்கவும். 2 தேக்கரண்டி காலிஃப்ளவர் வறுவலை நடுவில் வைக்கவும். ஓரங்களை சேர்த்து நடுவில் குவித்து மூடவும்.

  4. 4

    இதே போல் எல்லா சப்பாத்தி மாவையும் உருட்டி வைக்கவும்.
    நிரப்ப பட்ட ஒரு உருண்டையை எடுத்து கொள்ளவும். குவித்த தடிமான பகுதியை மேலே வருமாறு வைத்துக் கொள்ளவும்

  5. 5

    வரண்ட மாவில் தொய்த்து சப்பாத்தி போல் 6-7 அங்குலம் வருமளவு மெதுவாக தேய்க்கவும். அதே நேரத்தில் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். கல்லில் எண்ணெய் ஊற்றி தேய்த்து வைத்த சப்பாத்தியை அதில் போடவும்.
    சப்பாத்தி நன்றாக உப்பி வரும் வரை இரு பக்கம் திருப்பி வேகவிடவும். இரு பக்கமும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும்.
    பழுப்பு நிறத்தில் வட்டங்கள் ஆங்காங்கே தோன்றும் போது சப்பாத்தியை கல்லில் இருந்து எடுத்துவிடவும்.சூடாக கோபி பரோட்டாவை பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Ezhil
Hema Ezhil @cook_26380385
அன்று

Similar Recipes