தேவையான பொருட்கள்

25minits
2 பரிமாறுவது
  1. நல்ல பழுத்த தக்காளி -6 வெங்காயம்-1 பச்சை மிளகாய்-2
  2. புதினா ஒரு பிடி இஞ்சி பூண்டு தேவையான அளவு அரிசி ஒன்றரை டம்ளர்
  3. தாளிப்பதற்கு எண்ணெய் நெய் பட்டை கிராம்பு சோம்பு வெந்தயம் கல்பாசி
  4. வர மிளகாய் 5 மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

25minits
  1. 1

    முதலில் வெங்காயம் தக்காளி கற்பனை எடுத்துக் கொள்ளவும் ஒரு மிக்ஸி ஜாரில் அரைப்பதற்கு இஞ்சி பூண்டு வரமிளகாய் சோம்பு பட்டை கிராம்பு எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு எடுத்து வைத்த மசாலா பொருட்களை அரைத்து கொள்ளவும் பிறகு ஒரு குக்கரில் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் நெய் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து கிராம்பு ஏலக்காய் கல்பாசி பூ சேர்த்து தாளித்துக் கொள்ளவும் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  3. 3

    வெங்காயம் வதங்கிய பின் புதினா புதினா தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளி நன்றாக வதக்கவும்

  4. 4

    பிறகு அரைத்து வைத்த மசாலா சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    ஒன்னரை டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு அரிசியை சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வைக்கவும் பிறகு இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கவும்

  6. 6

    தக்காளி சாதம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes