பசலைக்கீரை புலாவ்/Palak pulao

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#GA4 #week 2 பசலைக்கீரை நீரிழிவு நோயாளிகள் மிகவும் சிறந்தது.பசலைக்கீரையில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும்.

பசலைக்கீரை புலாவ்/Palak pulao

#GA4 #week 2 பசலைக்கீரை நீரிழிவு நோயாளிகள் மிகவும் சிறந்தது.பசலைக்கீரையில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4-5 பரிமாறுவது
  1. பசலைக்கீரை 1 கத்தை
  2. பெரிய வெங்காயம் 2
  3. பச்சை மிளகாயை 5
  4. இஞ்சி, பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  5. அரிசி 250 கிராம்
  6. தண்ணீர் தேவையான அளவு
  7. சிறியதுண்டு பட்டை, கிராம்பு 1, ஏலக்காய் 1
  8. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  9. காய்ந்த மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  10. பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
  11. நெய் 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபூள் ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை தண்ணீர் விட்டு நன்றாக ஊற வைத்து கொள்ளவும்.

  2. 2

    பசலைக்கீரையை‌ காம்பை ஆய்ந்து நன்றாக கழுவி கொள்ளவும்.

  3. 3

    பசலைக்கீரை பொடியாக நறுக்கி கொள்ளவும் பெரிய வெங்காயம் பச்சை மிளகாயை அறிந்து கொள்ளவும்.

  4. 4

    இஞ்சி பூண்டு மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்

  5. 5

    கூக்கரில் நெய்,எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.பிறகு வெங்காயம், பச்சை மிளகாயை இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  6. 6

    பொடியாக நறுக்கிய பசலைக்கீரை,முந்திரி சேர்த்து நன்றாக வதக்கவும் பின்பு ஊறிய அரிசியை சேர்த்து நன்றாக கலந்து விட்டு தண்ணீர் தேவையான அளவு ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு மூடி விசில் போட்டு 3 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.

  7. 7

    ருசியான பசலைக்கீரை புலாவ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
அன்று

Similar Recipes