பழமையான வேர்கடலை சோறு

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#ONEPOT
பழமையான வேர்க்கடலை சோறு இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளத்தை ஆயிலில் பொரித்து சாப்பிட வேண்டும். சூடாக இருக்கும் பொழுது சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.😄😄

பழமையான வேர்கடலை சோறு

#ONEPOT
பழமையான வேர்க்கடலை சோறு இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளத்தை ஆயிலில் பொரித்து சாப்பிட வேண்டும். சூடாக இருக்கும் பொழுது சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.😄😄

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  1. 1/4கப் புழுங்கல் அரிசி
  2. உப்பு
  3. அரைக்க:
  4. 1/4டீஸ்பூன் சீரகம்
  5. 5மிளகு
  6. 1/2டீஸ்பூன் தனியா
  7. 1வரமளகாய்
  8. 1கைப்பிடி வறுத்த வேர்க்கடலை
  9. தாளிக்க:
  10. 2டீஸ்பூன் ஆயில்
  11. 1/2டீஸ்பூன் கடுகு
  12. 4 சின்ன வெங்காயம்
  13. சிறிதுபெருங்காயம்
  14. சிறிதுகறிவேப்பிலை
  15. ஆயிலில் பொரித்த அப்பளம்

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    1/4 கப் புழுங்கல் அரிசியை கழுவி வேகவைத்து விடவும். சாதம் வெந்து கஞ்சியுடன் இருக்கும்பொழுது அடுப்பை சிம்மில் வைத்து விடவும். மிக்ஸி ஜாரில் 1/4 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் தனியா, 5 மிளகு, 1 வரமிளகாய், 1 கைப்பிடி வேர்க்கடலை சேர்த்து பொடியாக அரைத்து விடவும்.

  2. 2

    வேர்க்கடலைப் பொடியை கஞ்சியுடன் இருக்கும் குழைந்த சாதத்தில் சேர்த்து விடவும். உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

  3. 3

    கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு 1/2 டீஸ்பூன் கடுகு சிறிது பெருங்காயம், சிறிது கறிவேப்பிலை, 4 சின்ன வெங்காயம் தட்டியது சேர்த்து வதக்கி விடவும்.

  4. 4

    வதக்கியதை சாதத்துடன் சேர்த்து நன்கு கலக்கி விடவும். பழமையான வேர்க்கடலை சோறு தயார்😄😄 இது மிகவும் சுவையாக இருக்கும். இதனுடன் ஆயிலில் பொரித்த அப்பளத்தை வைத்து சாப்பிட்டால் மேலும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

கமெண்ட் (16)

Similar Recipes