எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  1. 1/2 கிலோ கடலை மாவு
  2. 1/4 கிலோ சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
  3. 2பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
  4. ஒரு கொத்து கறிவேப்பிலை (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
  5. 10பல் பூண்டு (நச்சு வைத்துக் கொள்ளவும்)
  6. 1 முட்டை
  7. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  9. 1 ஸ்பூன் ஓமம்
  10. 1 ஸ்பூன் பெருஞ்சீரகம்
  11. 50 கிராம் டால்டா
  12. தேவையானஅளவு உப்பு
  13. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு, பெருஞ்சீரகம், ஓமம் இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸ் பண்ணி நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    பின்னர் இதில் கடலைமாவு, பெருங்காயத்தூள், மிளகாய் தூள், தேவைக்கு உப்பும் சேர்த்து, முட்டையையும் உடைத்து ஊற்றி நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

  3. 3

    பின்னர் இதில் டால்டாவை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

  4. 4

    பின்னர் இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி பிடித்தால் உதிர்ந்து வரக்கூடிய பருவத்தில் மாவை பிசைந்துக் கொள்ளவும்.

  5. 5

    ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் பக்கோடா மூழ்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவுக் கலவையில் இருந்துகொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து எண்ணெயில் போடவும்.

  6. 6

    இரண்டு பக்கமும் நன்றாக வெந்து கோல்டன் ப்ரவுன் கலரில் ஆகி வரும் போது எண்ணெயில் இருந்து கோரி எடுக்கவும்.

  7. 7

    அருமையான சுவையில் மொறு பொறுப்பான கடலை மாவு பக்கோடா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes