ஹோட்டல் சுவையில் வெஜ் சால்னா#cool

Sait Mohammed
Sait Mohammed @cook_26392897

கூல் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து டின்னருக்கு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது ஹோட்டலில் செய்யும் சால்னா டேஸ்ட் இருந்தது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20-30 நிமிடங்கள்
2-4 நபர்கள்
  1. எண்ணெய் - 1/4 கப், 1 டீஸ்பூன்
  2. முந்திரி பருப்பு - 3
  3. கசகசா - 1/2 டீஸ்பூன்
  4. பட்டை - 1
  5. ஏலக்காய்-1
  6. கிராம்பு-2
  7. அண்ணாச்சி பூ-1
  8. பிரிஞ்சி இலை-1
  9. மராத்தி மொக்கு-1
  10. சோம்பு-1/4 டீஸ்பூன்
  11. வெங்காயம்-1
  12. புதினா இலை-சிறிது
  13. கறிவேப்பிலை-சிறிது
  14. இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன்
  15. மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
  16. மிளகாய்த்தூள்-1 டீஸ்பூன்
  17. ஸ்பெஷல் மசாலா தூள் அல்லது கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன், 1/4 டீஸ்பூன்
  18. சோம்புத்தூள்-1/4 டீஸ்பூன்
  19. தக்காளி-1
  20. பீன்ஸ்-5
  21. கேரட்-1
  22. பச்சை பட்டாணி-2 டேபிள் ஸ்பூன்
  23. உருளைக்கிழங்கு-1
  24. உப்பு-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20-30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் என்னை விட்டு முந்திரி தேங்காய் கசகசா போட்டு வறுத்து கொள்ளவும் தேங்காயில் இருக்கும் ஈரப்பதம் போகும் வரை நன்றாக வறுத்து ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    வெங்காயம் தக்காளி கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு ஆகியவற்றை வெட்டி வைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு குக்கரில் 1/4 கப் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு அண்ணாச்சி பூ பிரிஞ்சி இலை மராத்தி மொக்கு சோம்பு ஏலக்காய் போட்டுக் கொள்ளவும்

  4. 4

    வெங்காயம் போட்டு வதக்கவும் வெங்காயம் நன்றாக வதக்கவும் புதினா இலை கருவேப்பிலை போட்டு வதக்கவும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்

  5. 5

    மஞ்சள் தூள் மிளகாய் தூள் ஸ்பெஷல் மசாலா தூள் அல்லது கரம் மசாலாத்தூள் சோம்புத்தூள் போட்டு வதக்கவும்

  6. 6

    தக்காளியை போட்டு வதக்கவும் தக்காளி நன்றாக மசிந்து மசாலாக்கள் எல்லாம் சேர்ந்து இருக்கும்

  7. 7

    வெட்டிவைத்த பீன்ஸ் கேரட் உருளைக்கிழங்கு பச்சைப் பட்டாணி ஆகியவற்றை போட்டு வதக்கவும்

  8. 8

    அரைத்து வைத்த விழுதை போட்டு வதக்கவும் உப்பு போட்டுக் கொள்ளவும்

  9. 9

    வதக்கிய பின் மிக்ஸி ஜாரை கழுவி மசாலா தண்ணியை ஊற்றவும்

  10. 10

    1 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவும் சால்னா கொதிக்கும்போது மூடியை போட்டு அதிக தணலில் 2 விசில் விடவும்

  11. 11

    மூடியை திறந்து விட்டு 10 நிமிடங்கள் மிதமான தனலில் கொதிக்கவிடவும் 1/4 டீஸ்பூன் குறைவாக ஸ்பெஷல் மசாலாத்தூள் அல்லது கரம் மசாலாத்தூள் தூவிக் கொள்ளவும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் சுவையான ஹோட்டல் வெஜ் சால்னா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sait Mohammed
Sait Mohammed @cook_26392897
அன்று

Similar Recipes