சாமை சாம்பார் சாதம் (Saamai sambar satham recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15-20 நிமிடம்
2-3 பரிமாறுவது
  1. 7-8 சின்ன வெங்காயம்
  2. 1பெரிய தக்காளி
  3. 1 கேரட்
  4. 3 கத்தரிக்காய்
  5. 5 பீன்ஸ்
  6. 1/2முள்ளங்கி
  7. மல்லித்தழை சிறிதளவு
  8. 3 டீஸ்பூன் சாம்பார் தூள்
  9. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 4-5 துண்டு முருங்கைக்காய்
  11. 2 ஸ்பூன் எண்ணெய்
  12. 1 ஸ்பூன் நெய் விருப்பப்பட்டால்
  13. 1 டீஸ்பூன் கடுகு உளுந்து
  14. கருவேப்பிலை சிறிதளவு
  15. 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள்
  16. 1 கப் சாமை
  17. 1/2 கப் துவரம் பருப்பு
  18. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

15-20 நிமிடம்
  1. 1

    குக்கரில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து பெருங்காயம் சின்ன வெங்காயம் தக்காளியை சேர்க்கவும். சிறிது நேரம் வதங்கிய பின்பு காய்கறிகளை சேர்க்கவும்

  2. 2

    பருப்பு மற்றும் சாமியை தனித்தனியாக சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    காய்கறிகளுடன் பருப்பு மற்றும் சாமையை சேர்த்து தண்ணீர் நான்கு பங்கு சேர்க்கவும். மஞ்சள் தூள் சாம்பார் தூள் சேர்க்கவும்.ஒரு விசில் வந்த பிறகு மிதமான தீயில் வைத்து நன்றாக வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்

  4. 4

    சற்று நேரம் கழித்து குக்கரை திறந்து உப்பு நெய் மல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.பல வகையான காய்கறிகள்,சாமை சேர்த்த சாம்பார் சாதம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes