சாம்பார் சாதம் (Sambar satham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சாம்பார் சாதம் செய்வதற்கு தேவையான காய்கறிகள்: 15 சின்ன வெங்காயம், 1 முருங்கைக்காய் நறுக்கியது,3 கத்தரிக்காய் 1 முள்ளங்கி, 4 அவரைக் காய், 4 பீன்ஸ்,1 கேரட்,1 தக்காளி, 2 அடக்கு மாங்காய் கழுவி எடுத்து வைக்கவும். கத்திரிக்காயை தாளிக்கும் பொழுது நறுக்கிக் கொள்ளவும்.1/2 கப் துவரம் பருப்பை கழுவி தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு குக்கரில் வேக விடவும். வறுத்து அரைக்க:1 டீஸ்பூன் கடலை பருப்பு, தனியா 2 டீஸ்பூன், 1 டீஸ்பூன் சீரகம்,1 டீஸ்பூன் மிளகு அதனுடன்,
- 2
7 வரமிளகாய் எடுத்து வைத்து, கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு, கடலை பருப்பு, தனியா சீரகம்,மிளகு,வரமிளகாய் பொன்னிறமாக வறுத்து தேங்காய்த் துருவல் 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு வறுத்து விடவும்.
- 3
நன்கு வறுத்து மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து விழுதாக வைக்கவும்.
- 4
கடாயில் 2 டீஸ்பூன் நெய்விட்டு, 1 டீஸ்பூன் கடுகு, 1 வரமிளகாய் கிள்ளியது சிறிது கறிவேப்பிலை தாளித்து, 15 சின்ன வெங்காயம், 1தக்காளி நறுக்கியது சேர்த்து நன்கு வதக்கி நறுக்கிய காய்கறி களையும் சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
- 5
காய்கறிகள் நன்கு வதங்கியவுடன் வெந்த துவரம்பருப்பில் சேர்த்து,1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலக்கி விடவும். 1 எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊற விடவும்.
- 6
புளியை கெட்டியாக கரைத்து 1/2 கப் எடுத்து வைக்கவும். அரைத்த விழுதை காய்கறிகளுடன் சேர்த்து,1 விசில் வேகவிடவும். புளித் தண்ணீரை சேர்க்கவும்.
- 7
அடுப்பை சிம்மில் வைத்து, தேவையென்றால் உப்பு சேர்த்து பச்சை வாசனை நீங்க நன்கு கொதிக்க விடவும். சுவையான சாம்பார் ரெடி😋😋
- 8
வடித்து வைத்த சாதத்தை அகலமான ஒரு கிண்ணத்தில் சேர்த்து 2 டீஸ்பூன் நெய் விட்டு நன்கு மசித்து விடவும். சிறிது சிறிதாக சாம்பாரை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
- 9
சாதம் கட்டி இல்லாமல் சாம்பாருடன் கலக்கி, கடைசியாக மேலே சாம்பார் சேர்த்து நெய் 2டீஸ்பூன் விட்டு எடுத்து வைக்கவும். வடகம், அப்பளம் பொரித்து வைக்கவும்.
- 10
சாம்பார் சாதத்துடன் அப்பளம், வடகம் பொரித்து வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.😋😋
- 11
சுவையான சாம்பார் சாதம், அப்பளம், வடகம் ரெடி😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கோவில் சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)
#வெங்காயம் சேர்க்காத சாம்பார் சாதம்.தங்கள் வீட்டில் என்ன காய்கறிகள் இருக்கிறதோ தகுந்த காய்களை சேர்த்து இந்த சாம்பார் சாதம் செய்யலாம். இதனுடன் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். சாதம் எவ்வளவு செய்கிறீர்களோ அதற்கு தகுந்தாற்போல கூடவோ குறைத்தோ காய்களை நறுக்கிக் கொள்ளவும். அதிக காய்கள் இருந்தால் அது அதில் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். இரண்டு மூன்று காய்கறி வகைகள் என்றால் காய்கறிகளின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.இது நைவேத்தியத்திற்கு ஆக செய்த சாம்பார் சாதம் அதனால் வெங்காயம் சேர்க்க வில்லை. நான் இன்று வீட்டில் இருந்த காய்களை வைத்து செய்தேன். Meena Ramesh -
"மதிய உணவு சாதம்,முருங்கைக்காய் பருப்பு சாம்பார்".. - (Rice & murungai kai parupu sambar recipe)
.#Everyday2 Jenees Arshad -
-
-
-
புளிச்சக் கீரை சாம்பார் (Gongura leaves sambar)
புளிச்சக்கீரை இயற்கையாகவே புளிப்பு, சுவை கொண்டுள்ளதால், இந்த சாம்பாருக்கு புளி சேர்க்கத் தேவையில்லை. தெலுங்கில் கோங்குரா என்று சொல்லப்படும் இந்தக்கீரை மிகவும் சுவையாக இருக்கும்.இது ஒரு ஆந்திர ஸ்டைல் சாம்பார்.#sambarrasam Renukabala -
-
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#Nutrient1ஊட்டச்சத்துக்களின் ஒரு மொத்த கலவை சாம்பார் .எளிதாக செய்யலாம்.இதில் சேர்க்கும் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. காய்களில் நார்ச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. எளிமையான சமையல் முதல் விருந்து உபசாரங்கள் வரை சாம்பார் இடம் பிடித்திருக்கும் .சாம்பாரை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் . Shyamala Senthil -
-
-
-
-
கிளாக்காய் சாம்பார் (Kilaakkaai sambar recipe in tamil)
#jan1கிளாக்காய் சாம்பார் மாங்காய் சாம்பார் போல புளிப்பாகவும், துவர்ப்பாகவும் அருமையாகவும் இருக்கும். Shyamala Senthil -
கதம்ப சாம்பார் (கலவை சாம்பார்)(kathamba sambar recipe in tamil)
#pongal2022 கதம்ப சாம்பார்க்கு முக்கியமா "அக்காய்"கள் வேணுங்க... அதாவது நம்ம நாட்டு காய்கள், அரசாணிக்காய், மேரக்காய்(சௌ சௌ), அவரைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய், கத்திரிக்காய், கோவக்காய் இந்த மாதிரி அக்காய்கள ஒரு 5 (அ) 7, ஒன்பது கிடைச்சா கூட சேர்த்துக்கலாம். இந்த மாதிரி நாட்டு அக்காய்கள் சேர்ந்து அபரிமிதமான சுவையில இருக்குங்க கலவை சாம்பார்...ஊர்ல அம்மா வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மாச்சி நாகர்கோவில் காரங்க.. ஒவ்வொரு பொங்கலுக்கும் அவங்க கதம்ப சாம்பார் வீட்டுக்கு வந்துடும்.. அருமையான சுவையா இருக்கும்.. இப்போ கதம்ப சாம்பாருக்காக ஊருக்காங்க போக முடியும்.. நம்மளே செய்வோம்💪💪 Tamilmozhiyaal -
மொச்சை பயிறு சாம்பார் (Mochai payaru sambar recipe in tamil)
#jan1அதிகம் புரோட்டீன் சத்துக்களைக் கொண்டக் குழம்பு Sarvesh Sakashra -
-
முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)
#CF7 #சாம்பார் சாதம்முள்ளங்கி மிகவும் நலம் தரும் காய்கறி. புற்று நோய் தடுக்கும் சக்தி கொண்டது. முள்ளங்கி கீரையில் விட்டமின் C, B6, A magnesium, phosphorus, iron, calcium, unique antioxidants , such as sulforaphane indoles, as well as potassium and folic acid.நார் சத்து ஏராளம். கொலஸ்ட்ரால், இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் immunityஅதிகரிக்கும். . Liver, intestine, digestionக்கு நல்லது. இலைகள், பூக்கள், கிழங்கு எல்லாம் சாம்பாரில். சேர்க்கலாம், தேங்காய், பருப்பகள், ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். Lakshmi Sridharan Ph D -
இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
#Vattaramகோயமுத்தூரில் அன்னபூர்ணா இட்லி,வடை சாம்பார் மிகவும் ஃபேமஸ். இங்கு கிடைக்கும்சாம்பாருக்கு உருகாத மனமே இல்லை. காபியும் கூட சேர்த்துக்கொள்ளவேண்டும். அதே சுவை அதே மணத்துடன் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்காக. Renukabala -
-
More Recipes
கமெண்ட் (17)