சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

#millets
சுகர் பேஷண்ட்ஸ் இதை எடுத்துக்கொள்ளலாம்.

சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil)

#millets
சுகர் பேஷண்ட்ஸ் இதை எடுத்துக்கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1கப் கேழ்வரகு மாவு
  2. 2பெரிய வெங்காயம்
  3. 2பச்சை மிளகாய்
  4. 2கொத்து கறிவேப்பிலை
  5. 3ஸ்பூன் துருவிய தேங்காய்
  6. 2ஸ்பூன்கஸ்தூரி மேத்தி
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. 1/4ஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 2பின்ச் மஞ்சள் தூள்
  10. 2ஸ்பூன்எண்ணெய்
  11. 1ஸ்பூன் கடுகு
  12. 1ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  13. 1ஸ்பூன் கடலைப்பருப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வெங்காயம் பச்சைமிளகாயை நறுக்கி எடுத்துக் கொள்ளவும் தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்த பின் கடுகு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு வெடித்தவுடன் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் இதில் சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும். பின்பு துருவிய தேங்காயையும் சேர்க்கவும்.

  3. 3

    ஒரு நிமிடம் கிளறிய பின்பு. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும். இப்போது வதக்கிய பொருட்களை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.

  4. 4

    எடுத்து வைத்துள்ள ஒரு கப் ராகி மாவை சேர்த்து கிளறி விடவும். இந்த இரண்டு ஸ்பூன் கஸ்தூரி மேத்தி(ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையும் சேர்த்து கொள்ளலாம்) சேர்த்து கிளறவும்.

  5. 5

    தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் சாப்ட்டாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும். உருண்டைகளாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.

  6. 6

    பின்பு ஈரத்துணியில் இந்த உருண்டையை எடுத்து தட்டி தோசை தவாவில் போட்டு வேகவிடவும் எண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவும்.

  7. 7

    வெந்த பிறகு பரிமாறவும் (தேங்காய் சட்னி மீன் குழம்பு நல்ல காம்பினேஷன்).

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
அன்று

Similar Recipes